உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசா இன்றி தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது..!

நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 17 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (14.05.2026) பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது 14 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்ட 12 சீனப் பிரஜைகள் மற்றும் 2 மலேசிய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகாபுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருகோணமலை பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது, விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 மற்றும் 50 வயதுடைய 3 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான மேலதிக விசாரணைகளில் களுத்துறை வடக்கு பொலிஸாரும் திருகோணமலை பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை