jaffna woman murder forensic police investigation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை..!

  • Oct 6, 2026 - 11:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான பெண் மீது சரமாரியாக கத்தியால், வெட்டியதுடன் , பெண்ணின் தலைமுடிகளையும் கத்தியால் அறுத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் அதனை தொடர்ந்து […]

ampara major heroin trafficker arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறையில் ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது..!

  • Oct 6, 2026 - 11:07 AM
  • 0 Comments

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கல்ஹாரா’ என்றழைக்கப்படும் ‘டின் மல்லி’ […]

colombopitty jummah mosque army anniversary blessing event youre using our basic model log in or sign up for more intelligence log in sign up for free | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத  நிகழ்வு..!

  • Oct 6, 2026 - 11:04 AM
  • 0 Comments

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு இராணுவத் தளபதி உள்ளிட்ட பல உயர் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் நேரில் பங்கேற்பு. இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன் ஓதுதல்) மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன அவர்கள் தலைமை விருந்தினராகக் […]

sri lankan honoured among 100 with special international peace award | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு..!

  • Oct 6, 2026 - 10:59 AM
  • 0 Comments

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) சிறப்பாக இன்று நடைபெற்றது. சர்வதேச சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் சமாதானம், சமூகப் பணி மற்றும் மனிதநேயச் செயற்பாடுகளுக்காகப் பங்காற்றிய சிறந்த 100 ஆளுமைகளைச் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு அமைக்கப்பட்டிருந்தது. இதன்போது, நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நேபாளத்தின் […]

kankesanthurai 187 56 acre cement factory approval request | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காங்கேசன்துறையில் 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி கொடுங்கள்..!

  • Oct 6, 2026 - 10:55 AM
  • 0 Comments

காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் […]

buffalo theft two suspects remanded until 19th | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு..!

  • Oct 6, 2026 - 10:52 AM
  • 0 Comments

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களுடன் நேற்று (05.10.2026) […]

world habitat day 170 houses handed over in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக குடியிருப்பு தினம் – யாழில் 170 வீடுகள் கையளிப்பு..!

  • Oct 6, 2026 - 10:43 AM
  • 0 Comments

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு (ஐப்பசி 05), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிதாக […]

e0aeb5e0ae9fe0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0aeb5e0aebfe0aeb5e0ae95e0aebee0aeb0 e0ae85e0aeae | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழ் 199 வேலை திட்டங்கள் முன்னெடுப்பு..!

  • Oct 6, 2026 - 10:14 AM
  • 0 Comments

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக தற்போது 199 வேலைத்திட்டங்கள் 488.169 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற […]

4g ice drugs arrested youth | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான இளைஞன்..!

  • Oct 6, 2026 - 10:07 AM
  • 0 Comments

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை திங்கட்கிழமை(05.10.2026) இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது குறித்த சந்தேக நபரான இளைஞனின் உடமையிலிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் […]

sangupiddy bridge traffic restriction | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடான போக்குவரத்திற்கு தடை..!

  • Oct 6, 2026 - 10:00 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது. பாலத்தின் திருத்த பணி காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை, ஐந்து நாட்களுக்கு சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைசெய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். குறித்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊