சாவகச்சேரி பிரதேச சபையில் இன்று காலை மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது..!
சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று(19.11.2026) இடம்பெறுகின்றது. இந்த கூட்டத்திற்கு முன்பதாக பிரதேச சபைக் கட்டடத்தின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கப்பட்டது. இதில் இரண்டு மாவீர்ர்களின் சகோதரியும் பிரதேசசபை உறுப்பினருமான கலைவாணி நிறஞ்சனால் பொதுச்சுடர் ஏற்றப்பட்ட்டது. அதனைத்தொடர்ந்து உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன் போது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடந்து […]









