vipulananda student leaders | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விபுலானந்த வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..!

  • Jun 4, 2026 - 10:25 AM
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (03.06.2026) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் பி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வித்தியாலய மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் திருமதி எஸ்.செல்வச்சந்திரன் பிரதம அதிதியாகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திருமதி மேரி சந்திரசேகரன் மற்றும் பழைய மாணவர் சங்க உப தலைவர் திருமதி எஸ்.சுபாஜினி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 26 மாணவர் தலைவர்கள் சின்னம் […]

no polythene at temples | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆன்மீகத் தலங்களில் அன்னதானங்களை பொலித்தீ்ன் பைகளில் வழங்காதீர்கள்..!

  • May 29, 2026 - 02:11 PM
  • 0 Comments

மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் ஆன்மீகத் தலங்களில் அன்னதானங்களை பொலித்தீ்ன் பைகளில் வழங்காதீர்கள் என மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். பூநகரி கறுக்காய்தீவுப் பகுதி கோவில் ஒன்றில் அன்னதானத்தில் ஈடுபட்ட ஆலய நிர்வாகத்தினருடனும்- மக்களுடனும் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; கோவில்களிலும், தேவாலயங்களிலும் நிகழ்த்தப்படும் விசேட திருவிழா நிகழ்வுகளில் அன்னதானங்களை வழங்கும்போது அதனை எடுத்துச் செல்வதற்காக அதிக சூட்டோடு பொலுத்தீன் […]

release occupied lands | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காலத்தை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள்..!

  • May 29, 2026 - 02:03 PM
  • 0 Comments

மயிலிட்டியில் சிறிதரன் எம்பி கோரிக்கை காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார் மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு கோரி நடைபெற்ற கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் […]

mailiddy black flag protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்..!

  • May 29, 2026 - 01:59 PM
  • 0 Comments

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, […]

nainativu sea death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழப்பு..!

  • May 29, 2026 - 01:47 PM
  • 0 Comments

அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், பயணிகள் படகினை தவறவிட்டமையால் நேற்றைய தினம்(28.05.2026) கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். அதன்போது, சீரற்ற காலநிலையினால் அவர்கள் பயணித்த கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலையில் சிக்கியுள்ளது. இதன்போது படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார். அதனை அடுத்து , உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் […]

jaffna drug arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் கைதான போதைப்பொருள் வியாபாரி..!

  • May 29, 2026 - 01:42 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதையடுத்து பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற […]

sl weather report | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • May 29, 2026 - 01:37 PM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது […]

global fuel price rise | Pathivu News புதியவை உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை..!

  • May 28, 2026 - 12:30 PM
  • 0 Comments

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 97.8 டொலராகப் பதிவாகியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த வேளையில், […]

aswesuma payment starts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாளை முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு ஆரம்பம்..!

  • May 28, 2026 - 12:25 PM
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29.05.2026) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 லட்சம் முதியவர்களுக்காக, 3,493,915,000.00 ரூபாய் நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது. கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு: முதலாம் கட்டம் – 70 […]

pungudutivu body recovered | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புங்குடுதீவு கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் குருநகர் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளி..!

  • May 28, 2026 - 12:20 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் குருநகர் சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த வேலு உதயகுமார் (வயது 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 25ஆம் திகதி கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். அது தொடர்பில் குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன் , காணாமல் போனவரை தேடும் பணியில் சக தொழிலாளிகளும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp