hizbullah mp appears before bribery commission | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!

  • Aug 13, 2026 - 10:10 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

kilinochchi fisheries development coordination committee meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

  • Aug 13, 2026 - 10:08 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம்(12.08.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார். ​குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய தீர்வினை […]

curb indian fishermen intrusions and drug smuggling | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்,போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள்..!

  • Aug 13, 2026 - 09:45 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கோரியுள்ளார் வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள, ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம் […]

new us ambassador to sri lanka assumes office | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் பதவியேற்பு..!

  • Aug 13, 2026 - 09:41 AM
  • 0 Comments

கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்த்து மற்றும் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட […]

68 dengue deaths over 91000 affected | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

68ஆக உயர்ந்த டெங்கு மரணங்கள் 91,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!

  • Aug 13, 2026 - 09:37 AM
  • 0 Comments

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98% ஆனோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதோடு, அங்கு 19,406 நோயாளர்கள் (21.31%) பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்களும் (19.88%), கண்டி மாவட்டத்தில் 6,491 நோயாளர்களும் […]

sri lanka weather forecast today 3 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Aug 13, 2026 - 09:32 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், […]

government employees must follow the law | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும்! இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது!! கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன் காட்டம்

  • Aug 11, 2026 - 12:01 PM
  • 0 Comments

அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம் ராஜன் இன்று (11) தெரிவித்தார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் சுகாதார உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை தொடர்பாக அவர் செய்தியாளர் மத்தியிலே உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் சீருடை அல்லது சீருடைக்கான […]

rathmalana saima handed to peradeniya police | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘ரத்மலானா சைமா’ பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு..!

  • Aug 11, 2026 - 10:25 AM
  • 0 Comments

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட, ‘ரத்மலானே சைமா’ என அழைக்கப்படும் நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த கஞ்ச்பானி இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் இந்நபர், ஓகஸ்ட் 10 இரவு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இவரை, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அண்மையில் கைது செய்தனர். அவருடன் […]

lawyers association meets president | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்..!

  • Aug 11, 2026 - 09:48 AM
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை, அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அச்சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற […]

dambulla fatal accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தம்புள்ளையில் கோர விபத்து இளைஞன் பலி..!

  • Aug 11, 2026 - 09:44 AM
  • 0 Comments

தம்புள்ளை, வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, காலி – […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊