sl weather today 25 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 5, 2026 - 09:59 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05.06.2026) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் […]

protect thenmaradchi groundwater | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

தென்மராட்சியின் நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்..! இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கோரிக்கை

  • Jun 5, 2026 - 09:56 AM
  • 0 Comments

தென்மராட்சியின் நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இயற்கையின் நண்பர்கள் இயக்கம் பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நிலத்தடிநீர் வளம் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் மிகவேகமான அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், உலகச் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டாவது தென்மராட்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் விழித்துக்கொண்டு, உடனடியாக இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘இயற்கையின் நண்பர்கள் இயக்கம்’ அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் […]

karaithivu debate victory | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உள்ளூராட்சிமன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை அபார வெற்றி..!

  • Jun 5, 2026 - 09:51 AM
  • 0 Comments

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்(FSLGA) ஏற்பாட்டில் மாகாணமட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை அபார வெற்றி. காரைதீவூ பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கும் எறாவூர் நகர சபையின் உறுப்பினர்களுக்கும் இடையேயான இப் போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் பெற்ற புள்ளிகள் : 299 எறாவூர் நகர சபையினர் பெற்ற புள்ளிகள் : 254

sritharan hospital visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்….!

  • Jun 4, 2026 - 02:36 PM
  • 0 Comments

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட வைத்தியசாலையின் வெளி வளாகப் பிரதேசங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சங்கானை பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பாக தன்னாலான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என […]

harees political allegation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரசியல் இலாபமீட்டுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடிக்கின்றார்..! சட்டத்தரணி நிதான்சன்

  • Jun 4, 2026 - 12:33 PM
  • 0 Comments

தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து அரசியல் இலாபமீட்டுவதற்காக இலைமறை காயாக இருந்து மறைந்து போன ஒரு சில அரசியல் வாதிகள் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக மீண்டும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்துகின்ற வகையில் பல செய்திகளை உண்மைக்கு புறம்பாக அரசியல் இலாபமீட்டும் நோக்கத்தில் கூறி வருகின்றார்கள்.குறித்த விடயத்தை கூற வேண்டுமாயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவராகவும் இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் […]

dayalini dileepan case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தயாளினி திலீபன் வழக்கில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!

  • Jun 4, 2026 - 12:28 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவுரையாளரின் வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெளிவாகுவதுடன், விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 16 […]

media literacy workshop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை..!

  • Jun 4, 2026 - 11:53 AM
  • 0 Comments

சுகாதாரம் மற்றம் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (04.06.2026) காலை 8.30 மணி முதல் தரமான ஊடக அறிவு தொடர்பாக ஊடக பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுவருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் […]

stop dividing people | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புலி சாயம் பூசி இன்னும் எம் மக்களை பிரித்தாளக் கூடாது..!

  • Jun 4, 2026 - 11:22 AM
  • 0 Comments

சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பில் நேற்று புதன்கிழமை(03.06.2026) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன் […]

nawalapitiya tree collapse | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாவலப்பிட்டிய பகுதியில் மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி..!

  • Jun 4, 2026 - 10:45 AM
  • 0 Comments

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (04.06.2026) காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். விபத்து நடந்ததைத் தொடர்ந்து, […]

kamalanathan retirement honor | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு..!

  • Jun 4, 2026 - 10:33 AM
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (03.06.2026) காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது. பாடசாலை பதில் அதிபர் கலாநிதி கதிரேசபிள்ளை விருத்தாசலம் தலைமையிலும், பகுதித் தலைவர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பற்றிய கருத்துரைகளும், வாழ்த்துக் கவிகளும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp