vijitha speaks to nepal foreign minister by phone | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேபாள வௌிவிகார அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய விஜித..!

  • Aug 27, 2026 - 12:48 PM
  • 0 Comments

நேபாள வௌிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27.08.2026) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்வதற்காக, தேவைப்படும் எந்தவொரு குறிப்பிட்ட உதவிகள் தொடர்பாகவும் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எமது நெருங்கிய நண்பரும் அண்டை நாடும் ஆகிய நேபாளத்துடனான […]

two aides of illegal liquor smuggler arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோத மதுபான கடத்தல்காரரின் இரு உதவியாளர்கள் கைது..!

  • Aug 27, 2026 - 12:01 PM
  • 0 Comments

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவருடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பைகளில் அடைக்கப்பட்ட 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிந்தெல்பிட்டி பகுதியில் வைத்து இந்த […]

alankara kandan arrives on the sacred chariot | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

திரு மஞ்சத்தில் ஏறி வந்த அலங்கார கந்தன்..!

  • Aug 27, 2026 - 12:00 PM
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை திருவிழா இடம்பெற்றது. பத்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, திருமஞ்சத்தில், வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விசேட திருவிழாவான பத்தாம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி முருகப்பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1581148706740256

e0ae9ae0af86e0aeaee0af8de0aeaee0aea3e0aebf e0aeaae0af81e0aea4e0af88e0ae95e0af81e0aeb4e0aebfe0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aebee0aeb0 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம்..! பிமல் உறுதியளிப்பு

  • Aug 27, 2026 - 11:11 AM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கம் […]

urgent notice for sri lankans in nepal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்..!

  • Aug 27, 2026 - 10:08 AM
  • 0 Comments

நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் […]

sri lankan refugees in india can return home without restrictions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கையர்கள் தடையின்றி நாடு திரும்பலாம்..!

  • Aug 27, 2026 - 09:43 AM
  • 0 Comments

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் […]

nepal floods death toll rises to 157 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேபாளத்தில் வெள்ளத்தின் கோரம்..! உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு

  • Aug 27, 2026 - 09:41 AM
  • 0 Comments

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 265 […]

sri lanka weather today 26 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 27, 2026 - 09:39 AM
  • 0 Comments

நாட்டில் இன்றும் (27.08.2026) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் […]

army allows walking on palaly road | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி..!

  • Aug 26, 2026 - 11:51 AM
  • 0 Comments

செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஊடாக செல்லும் பலாலி வீதி கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு , நேர கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டது. இந்நிலையில் செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ள […]

sri lanka all out for 290 runs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி..!

  • Aug 26, 2026 - 11:49 AM
  • 0 Comments

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் சார்பில் சொனால் தினுஷ தமது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அத்துடன் பசிந்து சூரிய பண்டார 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Prasidh Krishna மற்றும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊