நேபாள வௌிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27.08.2026) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனை இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்வதற்காக, தேவைப்படும் எந்தவொரு குறிப்பிட்ட உதவிகள் தொடர்பாகவும் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது நெருங்கிய நண்பரும் அண்டை நாடும் ஆகிய நேபாளத்துடனான தமது ஒருமைப்பாட்டிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?

