சாவகச்சேரிப் பிரதேசசபையினுடைய உப அலுவலகங்கள் அனைத்தும் காலை 8.30மணிக்கு இயங்க ஆரம்பிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பிரதேசசபையின் உப அலுவலகங்கள் காலை 8.30மணிக்கு இயங்க ஆரம்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்து 8.30மணிக்கு இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் சபை எல்லைக்குள் சட்ட ரீதியாக முரண்பாடுகள் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதனை சட்ட ரீதியாக அணுக வேண்டும்.
மேலும் மழை காலம் வருவதற்கு முன்னர் மயானங்கள், வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும்.மழை வெள்ளம் செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வெள்ள நீரைக் கடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
What’s your Reaction?

