relief cannot end the fight for justice | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நிவாரணம் வழங்குவதானது நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப் பயன்படாது..!

  • Aug 26, 2026 - 11:47 AM
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும், நிவாரணம் வழங்குவதானது நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப் பயன்படாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் […]

prayer by families of the forcibly disappeared | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை..!

  • Aug 26, 2026 - 11:43 AM
  • 0 Comments

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி ஒட்டி இருந்தனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை “பின்” பண்ணி வைத்திருந்தார்கள். […]

special relief package for families of the disappeared | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவி பொதி..!

  • Aug 26, 2026 - 10:38 AM
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது; […]

bus stop honoring m kanagaratnams memory | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவாக பேருந்து தரிப்பிடம்..!

  • Aug 26, 2026 - 10:23 AM
  • 0 Comments

இலங்கை கடற்படையில் (Royal Ceylon Navy) பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுப் பேருந்து தரிப்பிடம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து தரிப்பிடத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர், சுன்னாகம் பொலிஸ் […]

dont discourage investors heading north | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு நோக்கி வரும் முதலீட்டாளர்களை விரக்தியடைய வைக்காதீர்கள்..!

  • Aug 26, 2026 - 10:21 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது எனவும் சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை தாமதமின்றி வழங்கி, அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர். பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் சன்சக்தி டிரேடர்ஸ் (தனியார்) நிறுவனம் முன்னெடுக்கவுள்ள முதலீட்டுத் திட்டம் […]

love justice can heal tamil hearts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் இதய காயங்களுக்கு அன்பும் நீதியும் மட்டுமே மருந்தாக முடியும்..!

  • Aug 26, 2026 - 10:18 AM
  • 0 Comments

தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி ‘அன்பு’ ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய […]

meaningful milad un nabi wishes to all muslims | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்..!

  • Aug 26, 2026 - 10:17 AM
  • 0 Comments

இஸ்லாமிய நாட்காட்டியின் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா இன்றாகும். சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (26) முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபி […]

may love peace brotherhood flourish | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்..!

  • Aug 26, 2026 - 10:15 AM
  • 0 Comments

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைத்தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேயம், சகோதரத்துவம், நீதி, அன்பு, பொறுமை மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துரைத்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான வழிகாட்டியாகும். குறிப்பாக, பல்வேறு இனங்களும் மதங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் இலங்கை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பரஸ்பர […]

rain strong winds in sri lanka today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பலமாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று..!

  • Aug 26, 2026 - 10:13 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் அநுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும். அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் […]

milad un nabi today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று புனித மீலாதுன் நபி தினம்..!

  • Aug 26, 2026 - 10:12 AM
  • 0 Comments

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26.06.2026). இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது. கி.பி 570-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. பின்னர் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊