அரச வைத்தியசாலைகளில் கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு என வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு
செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். […]









