உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மக்கள் போராட்டத்தின் அடையாளமாக ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது

  • Jun 26, 2025 - 05:24 PM
  • 0 Comments

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்று (26-06) தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து , அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு நடவடிக்கை – இளங்குமரன் எம்.பி

  • Jun 26, 2025 - 05:18 PM
  • 0 Comments

யாழ். செம்மணிப் பகுதியில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது. இதனை குழப்பும் வகையில் செம்மணி பகுதியில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் அழைக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விஷமிகளாலேயே அங்கு பெரும் பதற்ற நிலையும் அச்ச நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். செம்மணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்று […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணிமனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியமென சட்டத்தரணிகள் தெரிவிப்பு

  • Jun 26, 2025 - 05:11 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது. செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்றவர் கரை திரும்பாத நிலையில் தேடுதல் வேட்டை தீவிரம்!

  • Jun 26, 2025 - 05:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை. 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை குறித்த மீனவர் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். வழமையாக 9.00 மணியளவில் கரைசேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை, அவர் பயணித்த கட்டுமரமானது […]

உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு ஜுலை மாதம் 2ஆம் திகதி வரை ஆபத்தில்லை

  • Jun 26, 2025 - 04:56 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம் (26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்குமிடையிலான சந்திப்பொன்று நடைப்பெற்றது

  • Jun 26, 2025 - 04:49 PM
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலி அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலி, 400 பேர் காயமென காசா தெரிவித்துள்ளது.

  • Jun 26, 2025 - 07:38 AM
  • 0 Comments

இஸ்ரேலின் காசா மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்து, சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல மரணங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பலியானவர்களின் பிணங்களை குடும்பத்தினர் எடுத்து செல்லும் போது ஏற்பட்ட அவலக் காட்சிகள் உலகை உலுக்கியன. இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெற்ற போர் நடவடிக்கையில் இதுவரை 56,156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]

உள்ளூர் செய்திகள்

தாய்மார்களால் செப்பேடு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது

  • Jun 26, 2025 - 07:07 AM
  • 0 Comments

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர். செம்மணி படுகொலைக்கு நீதி கோரி , யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு நேற்று (25-06) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகளை ஐ.நா மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு ஆளுநர் எடுத்தரைத்துள்ளார்

  • Jun 26, 2025 - 07:00 AM
  • 0 Comments

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (25-06) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண […]

உள்ளூர் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • Jun 26, 2025 - 06:50 AM
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp