உள்ளூர் செய்திகள்

நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகள் பற்றாக்குறையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

  • Jun 14, 2025 - 03:10 PM
  • 0 Comments

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பல […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

  • Jun 14, 2025 - 02:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு (13-06) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளராக யாழ் மாநகரசபை உறுப்பினர் கபிலன் நியமனம்

  • Jun 14, 2025 - 02:07 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

உள்ளூர் செய்திகள்

சங்கு சைக்கிள் கூட்டணிக்கெதிராக டக்ளஸ் சுமந்திரன் மணிவண்ணன் இணைவு

  • Jun 7, 2025 - 07:23 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டல், பணிப்புரை – அனுசரனையில் தான் அந்த கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிறிதர் தியேட்டருக்கு வந்து, தமது கட்சிக்கு ஆதரவு கோரினார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ‘இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நேற்று ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டருக்கு சென்று, உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் கூட்டாக இணைந்து ஆட்சியைப் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா பலத்த தாக்குதல். தடுமாறும் ஜெலென்ஸ்கி

  • Jun 7, 2025 - 07:10 AM
  • 0 Comments

400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இன்று ரஷ்யர்களால் உக்ரைன் மீது ஏவப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இன்று ரஷ்யர்களால் ஏவப்பட்டன. நமது நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் நகரங்களில் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் நாள் முழுவதும் தொடர்ந்தன. 80 பேர் காயமடைந்தனர், சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, உலகில் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக யாழ். நீதவான் நீதிமன்று பிரகடனம் செய்துள்ளது

  • Jun 7, 2025 - 06:59 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நேற்று (06-06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் […]

உள்ளூர் செய்திகள்

ஈபிடிபியுடன் கூட்டணி இல்லை ஆதரவுக்காகவே சந்திப்பு நடைப்பெற்றது- சுமந்திரன்

  • Jun 7, 2025 - 06:39 AM
  • 0 Comments

நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கொள்கை சார்ந்து எதனையும் பேசவில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணியில் உள்ள மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளிலும் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகளை சங்கு சைக்கிள் கூட்டணி கைப்பற்றும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Jun 7, 2025 - 06:26 AM
  • 0 Comments

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் […]

உள்ளூர் செய்திகள்

இந்திய மீனவர்களை சுட்டு பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனம் வேண்டுகோள்

  • Jun 6, 2025 - 05:26 PM
  • 0 Comments

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது […]

உள்ளூர் செய்திகள்

சுமந்திரனுக்கு செக் வைக்கும் கஜேந்திரகுமார்

  • Jun 6, 2025 - 05:07 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp