உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்!

  • Jun 3, 2025 - 08:42 PM
  • 0 Comments

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்!

  • Jun 3, 2025 - 08:23 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்புஅமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் […]

உள்ளூர் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • Jun 3, 2025 - 08:01 PM
  • 0 Comments

2025.05.06 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்ய அல்லது முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பார்வையிடும் வாய்ப்பு […]

உள்ளூர் செய்திகள்

கிருசாந்தி குமாரசுவாமி கொலை குற்றவாளிகளின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

  • Jun 3, 2025 - 03:51 PM
  • 0 Comments

கிருசாந்தி குமாராசுவாமி பாலியல்வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதிமறுத்துள்ளது. முதல் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச உட்பட தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவர் தாங்கள் பல வருடங்களாக மரணதண்டனை கைதிகளாக உள்ளனர் என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர். தங்களின் மரணதண்டனையை நிறைவேற்றால்,தங்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் அல்லது தங்களிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் மனைவியின் தலையை வெட்டி துண்டித்து கையில் எடுத்து சென்று பொலிஸில் சரணடைந்த கணவன்

  • Jun 3, 2025 - 03:41 PM
  • 0 Comments

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் ,ருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை ,ருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த […]

உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரனான ‘ ஷான் சுத்தா தப்பியோட்டம், கோட்டை விட்டசிறைக்காவலர்

  • Jun 3, 2025 - 03:11 PM
  • 0 Comments

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் மே மாதம் 30 ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழகத்திலிருந்து 37 வருடங்களின் பின் தாயகம் திரும்பியவருக்கு பிணை

  • Jun 2, 2025 - 04:09 PM
  • 0 Comments

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், குறித்த நபர் இன்றையதினம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இந்தியா உள்ளூர் சினிமா செய்திகள்

‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

  • Jun 2, 2025 - 03:58 PM
  • 0 Comments

‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1999 முதல் 2000 வரை வெளியான ‘கதை நேரம்’ மற்றும் 56 குறும்படங்கள், ‘ஜூலி கணபதி’ திரைப்படம் போன்றவற்றில் பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்தார். மேலும் ‘பொல்லாதவன்’, ‘கொடிவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவுப் பேருந்து ஏறும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விபத்தில் மரணமடைந்த இந்திய தூதரக அதிகாரியின் மகனும் உயிரிழப்பு

  • Jun 2, 2025 - 03:50 PM
  • 0 Comments

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்றிரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 26ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக வாகனம் – கார் மோதிய கோர விபத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். இந்த விபத்தில் அவரின் மனைவி (சீதாலக்ஷ்மி – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மகன் மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

விவசாய செய்கைகளுக்கு சீனா ஆதரவு வழங்க இணக்கம்

  • Jun 2, 2025 - 03:34 PM
  • 0 Comments

இலங்கைக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா-இலங்கை விவசாய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் விவசாய திணைக்களத்தில் நடைபெற்றது. இரு நாடுகளின் விவசாயத் துறை தொடர்பான அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தற்போதைய அரசாங்கம் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் விவசாயத் தொழிலை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp