உள்ளூர் செய்திகள்

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

  • May 31, 2025 - 08:14 PM
  • 0 Comments

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெந்துரன சந்திப்பில் உள்ள ரயில் வீதிக்கு அருகில் நேற்று (30) இரவு, மூன்று பேர் மீது குழுவொன்றினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படு காயமடைந்த மூவரும் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் இத்தமல்கொட, கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள்

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு கோரிக்கை!

  • May 31, 2025 - 08:06 PM
  • 0 Comments

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம்(31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நகைகளை அடகு வைத்தவர்களில் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் என்பவரே அவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார். குறித்த கோரிக்கையில், உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி […]

உள்ளூர் செய்திகள்

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

  • May 31, 2025 - 08:00 PM
  • 0 Comments

இடப்பெயர்வுகளுக்கான சர்வதேச அமைப்பின் ( IOM) பொறுப்பாளர் கிறிஸ்டின் பி. பார்கோவை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அண்மையில் கொழும்பில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மலையக தோட்டங்களில் இருந்து இடம்பெயரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயரும்போது, அவர்களுக்கு தேவையான வழிகாட்டலும், பாதுகாப்பும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பு, இடம்பெயருவோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முக்கியமானதொரு அடிப்படை […]

உள்ளூர் செய்திகள்

புதிய கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது!

  • May 31, 2025 - 07:46 PM
  • 0 Comments

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி […]

உள்ளூர் செய்திகள்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிக்கை!

  • May 31, 2025 - 07:38 PM
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 274 ஆகவும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 325 ஆகவும் உள்ளது. 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. […]

உள்ளூர் செய்திகள்

மாங்குளத்தில் 3007 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!

  • May 31, 2025 - 06:53 PM
  • 0 Comments

2017 மார்ச் 8ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3007 ஆவது நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, மாங்குளம் நகரில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் இவ்வாறு மாபெரும் முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் உறவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்நாளை குறிப்பாக நினைவுகூர்ந்தனர். இலங்கையில் நீதி கிடைக்காது எனும் நம்பிக்கையுடன், […]

செய்திகள்

பௌத்த சிங்கள பேரினவாதத்தின் அடையாள அழிப்பின் ஆறாவடு..!

  • May 31, 2025 - 08:08 AM
  • 0 Comments

யாழ் நூலக எரிப்பின் 44 ஆம் ஆண்டின் நினைவில் ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ். நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாகி விட்டிருக்கிறது. தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களும், பல நூற்றாண்டுகளுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

“Clean Sri Lanka” ஒத்துழைப்பில் கொழும்பும் அண்டிய பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

  • May 31, 2025 - 07:05 AM
  • 0 Comments

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “Clean Sri Lanka” ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30-05) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது. நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ […]

உள்ளூர்

எமக்கான நீதியை சர்வதேசம் வழங்கவேண்டும்- வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

  • May 31, 2025 - 12:18 AM
  • 0 Comments

காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், எமக்கான நீதி கோரி நாங்கள் தொடர்ச்சியாக போராடி வரும் […]

உள்ளூர்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு!

  • May 31, 2025 - 12:07 AM
  • 0 Comments

கற்பிட்டி – உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் என்பன நேற்று முன்தினம் (29) கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி விஜய கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போதுஇ காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றும்இ பாவிக்கப்படாத தோட்டாவொன்றும்இ வெற்றுத் தோட்டா ஒன்றும் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp