உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்கள ஊழியர்கள் நிரந்தரம் கோரி போராட்டம்

  • May 28, 2025 - 01:42 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர் விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள விவசாய ஆராய்ச்சி பிரிவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 75க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியும் இந்த கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் வங்காலையில் கடற்கரையில் கடலரிப்பால் கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகும் நிலையினை நேரில் கண்டறிந்தார் ரவிகரன் எம்பி.

  • May 28, 2025 - 01:24 PM
  • 0 Comments

மன்னார் – நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27-05) நேரடியாகச்சென்று பார்வையிட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த […]

உள்ளூர் செய்திகள்

தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

  • May 28, 2025 - 07:22 AM
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரத்திரட்டை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் தொடர்பான விபரம் பொலிஸ்மா அதிபருக்கு புதன்கிழமை (28) சமர்ப்பிக்கப்படும். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பட்டியல் விபரங்களை இதுவரையில் முழுமையாக சமர்ப்பிக்காத […]

உள்ளூர் செய்திகள்

பரிசோதனையின்றி 323 கொள்கலன் விடுவிப்பு பிமல் ரத்நாயக்கவை கைது செய்ய முடியுமாவென உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு சவால்

  • May 28, 2025 - 07:16 AM
  • 0 Comments

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரத்தக்கறை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் படிந்துள்ளது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சவால் […]

உள்ளூர் செய்திகள்

புhடசாலைகளில் சிறுவர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்படுவது அதிகரித்துள் பிரதமர் ஏற்பு

  • May 28, 2025 - 07:04 AM
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27-05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு மக்களின் காணிளை விடுவித்தால் தெற்கு அரசியல்வாதிகள் கடுப்படைகின்றார்கள் மை லோட்- வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம்

  • May 28, 2025 - 06:43 AM
  • 0 Comments

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் செவ்வாய்க்கிழமை (27.05) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய கொவிட் திரிபை அரசாங்கம் கவனமாக அவதானித்து வருகிறதென அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்

  • May 27, 2025 - 04:55 PM
  • 0 Comments

அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய கொவிட் 19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உலக வங்கி குழுவினருடன் யாழ் குப்பைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

  • May 27, 2025 - 04:11 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (26-5) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலை பிரதேசசபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சியும் முஸ்லீம் காங்கிரஸ் ஒப்பந்தம்

  • May 27, 2025 - 03:17 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் இன்று திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா காளாஞ்சி கையளிப்பு

  • May 27, 2025 - 02:53 PM
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்று வழங்கிவைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp