உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மனித இறப்புக்கான காரணம் குண்டுதாக்குதல்,சூட்டுக்காயங்கள் என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

  • May 29, 2025 - 04:18 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தெற்கு கடல் பகுதியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி

  • May 29, 2025 - 07:32 AM
  • 0 Comments

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், 02 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து 600 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்கு பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதன்போது 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இனவழிப்பு நினைவகத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய பொலிஸ் தீவிர விசாரணை

  • May 29, 2025 - 07:16 AM
  • 0 Comments

கனடா பிரம்டனில் அமைந்துள்ள மே 18 நினைவு தூபிக்கு அருகில் உள்ள மின்குமிழ்களை முகத்தை மறைத்த இரண்டு நபர்கள் வந்து சேதப்படுத்தியுள்ளனர் இநத நாசகார வேலை சம்பவம் நேற்று முன்;தினம் (27.05.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை கனேடிய பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை. சம்பவம் நடைபெற்ற போது கிடைத்த சிசிடிவி காணொளிகளை வைத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை முடிவடையும் வரை எதனையும் உறுதியாக கூற முடியாத நிலை இருப்பினும், […]

உள்ளூர் செய்திகள்

மகிந்த மீது அநுர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கோரவேண்டுமென சாகர காரியவசம் தெரிவிப்பு

  • May 29, 2025 - 07:06 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் தங்க கழிப்பறைகள் மற்றும் தங்க குதிரைகள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சாகர காரியவசம், ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு அந்தப் பொய்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.இது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி தன்னிடம் இருந்ததாக கூறும் கோப்புக் கட்டை யாராவது திருடிவிட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறார். […]

உள்ளூர் செய்திகள்

கொவிட் 19 திரிபு பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனை ஆரம்பம்

  • May 29, 2025 - 06:56 AM
  • 0 Comments

புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை […]

உள்ளூர் செய்திகள்

காற்றாலை மின் உற்பத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர் மன்னார் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

  • May 29, 2025 - 06:44 AM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் நேற்று (27-05) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான […]

உள்ளூர் செய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் வீசாவையும் வர்த்தகங்களையும் பாதுகாப்பதற்கு மீண்டும் யுத்தம் ஏற்படும் என்கிறார்கள்- சரத் பொன்சேக்கா

  • May 29, 2025 - 06:35 AM
  • 0 Comments

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 புதிய தாதியர்கள் நியமனம்

  • May 28, 2025 - 04:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் தெரிவு நிறைவு

  • May 28, 2025 - 02:42 PM
  • 0 Comments

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் ,ன்று புதன்கிழமை (28) ,டம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்கள ஊழியர்கள் நிரந்தரம் கோரி போராட்டம்

  • May 28, 2025 - 01:42 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர் விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள விவசாய ஆராய்ச்சி பிரிவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 75க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியும் இந்த கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தின் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp