உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் வேலை வேண்டி போராட்டம்

  • Jun 2, 2025 - 03:19 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி பரீட்சை நியமனம் வழங்கக் கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது, பேச்சுவார்த்தை போதும் தொழிலை தா?,அரச சேவையில் கிழக்கு மாகாணத்தை புறக்கணிப்பது ஏன், பரீட்சை வேண்டாம் தகுதிகான் அடிப்படையில் வேலை போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் செய்திகள்

புதிய கொவிட் ஒமிக்ரோன் கண்டுபிடிப்பு – கண்காணிப்பை பலப்படுத்த சுகாதார அதிகாரிகள் முனைப்பு

  • Jun 2, 2025 - 03:03 PM
  • 0 Comments

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும்,அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. புதியமாறுபாடுகள் தோன்றுவது வைரஸ் பரிணாமா வளர்ச்சியின் ஒரு வழக்கமான பகுதியாகும் […]

உள்ளூர் செய்திகள்

கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதி அநுரவுக்கு பகிரங்க கடிதம்

  • Jun 2, 2025 - 02:52 PM
  • 0 Comments

தமிழ்நாட்டின் அகதிமுகாமில் பல வருடம் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடியத் தமிழர் பேரவைதெரிவித்துள்ளது கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டின் அகதி முகாமில் பல வருடங்கள் வாழ்ந்த பின்னர் பலாலி விமானநிலையம் ஊடாக தாயகம் திரும்பிய 75 இலங்கை தமிழர் மே 29ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து […]

உள்ளூர் செய்திகள்

பேரவையும் சங்கும் சங்கமம், புதிய கூட்டணி ஒப்பந்தம்

  • Jun 2, 2025 - 02:40 PM
  • 0 Comments

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

  • Jun 1, 2025 - 10:53 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்இ யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோதுஇ அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு […]

உள்ளூர் செய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

  • Jun 1, 2025 - 10:32 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம்இ சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை  கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 60 கிராம் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை  மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை 15 கிராம் ஹெரோய்ன் […]

உள்ளூர் செய்திகள்

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21வது ஆண்டு நினைவேந்தல்..!

  • Jun 1, 2025 - 10:19 PM
  • 0 Comments

சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று (31-05-2025) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் திருவுருவப் படத்துக்கு தீபமேற்றி,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. {{CODE3}} இவ் அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதையும் […]

உள்ளூர் செய்திகள்

அநுரவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி வடபகுதியில் இயங்குகின்றது!

  • Jun 1, 2025 - 10:09 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி வடபகுதியில் இயங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளராகிய பொன்சுதன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (01) சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். {{CODE2}} இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தியின் உயர்ந்த கொள்கையானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உயரிய சிந்தனைக்குள்ளாள் உதயமானது. ஆனால் குறிப்பாக வடபகுதியில் தேசிய மக்கள் சக்தி நடந்து […]

உள்ளூர் செய்திகள்

தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

  • Jun 1, 2025 - 09:54 PM
  • 0 Comments

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில்  இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும்  நீரிற்குள் மூழ்கிய நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். {{CODE1}}   குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும்  10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன்  எனும் இருவரே  உயிரிழந்துள்ளனர். […]

உள்ளூர் செய்திகள்

இரு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

  • Jun 1, 2025 - 09:42 PM
  • 0 Comments

முல்லைத்தீவு  குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01) புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். {{CODE 1}} உயிரிழந்த இரு யுவதிகளும்  பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூதன் வயல் மற்றும் மாம்பூலி பகுதிகளில் இருந்து குமுழமுனை பகுதிக்குச் சென்ற இந்த இரு யுவதிகள் தமக்கு தெரிந்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp