உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் 35 வருடங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

  • Jun 28, 2025 - 05:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப்பட்டு்ள்ளது. பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் கடந்த வருடத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த கோவிலை துப்பரவு செய்து ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதற்காக செலவு செய்தனர். பின்னர் இராணுவத்தின் வாகனத்தினூடாக கோவில் நிர்வாகத்தினரை மாத்திரம் அழைத்துச் சென்று காண்பித்தனர். நேற்று முன்தினம் மாலை குறித்த பாதையினை விடுவித்து மக்கள் சிலர் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். […]

உள்ளூர் செய்திகள்

பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து சேகரிப்பு

  • Jun 28, 2025 - 05:21 PM
  • 0 Comments

வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி இன்று பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட […]

உலகம்

கனடாவுடன் வர்த்தகவுறவில்லை– ட்ரம்ப் தெரிவிப்பு

  • Jun 28, 2025 - 02:49 PM
  • 0 Comments

ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூட பேசி அந்நாட்டை டிரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபமடைந்த டிரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அடுத்த வரவு செலவு திட்டத்திற்காக அவசரமாக கூடுகின்றது பாராளுமன்றம்

  • Jun 28, 2025 - 02:32 PM
  • 0 Comments

அவசரக் கூட்டத்திற்காக பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை, 30 ஆம் திகதி கூடவுள்ளதென சபாநாயகர் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளின் பேரில், நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளையின்படி அவசரக் கூட்டம் கூட்டப்படும் என்று குறித்த வர்த்தமானியில் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பான தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த அவசரக் கூட்டம் கூட்டப்படுவதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும், பணியாளர்கள் பிரிவின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள்

தாயின் காதலனால் 9 வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட துயரம் நடைபெற்றுள்ளது

  • Jun 28, 2025 - 02:11 PM
  • 0 Comments

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக தொடர்ந்து தகாத உறவுக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடையவராகும். அவர் ரயில் ஓட்டுநராக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் சிறுமியின் தாயின் திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதலன் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வீட்டில் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டில் இல்லாதபோதும் சந்தேக நபர் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸ் விசாரணையின் போது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாறப்பண நியமனம்

  • Jun 28, 2025 - 01:48 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன அண்மையில் நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சமென சீமான் தெரிவித்துள்ளார்

  • Jun 28, 2025 - 01:38 PM
  • 0 Comments

ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற […]

உள்ளூர் செய்திகள்

யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

  • Jun 28, 2025 - 01:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. மணல்காட்டை சேர்ந்த 38 வயதுடைய மீனவரின் சடலமே கரையொதுங்கியுள்ளார். சடலமாக கரையொதுங்கிய மீனவர் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை (26-06) அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்ற மீனவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால் அன்றைய தினம் அவர் கரை திரும்பாததால் , சக தொழிலாளிகள் அவரை தேடி கடலுக்கு சென்ற வேளையில், அவரது […]

உலகம் செய்திகள்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • Jun 27, 2025 - 11:11 PM
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]

உள்ளூர் செய்திகள்

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு!

  • Jun 27, 2025 - 10:52 PM
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் மூழ்காளர்கள் இன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21ஃ22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp