இலங்கையுடனான ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு காரணம்!
அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வெளிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம். […]









