உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குருணாகலில் காரில் எரித்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் வழக்கின்; சந்தேக நபர்கள் கைது!

  • Jun 30, 2025 - 04:57 PM
  • 0 Comments

குருணாகலில் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் இருந்து தீயில் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று (29-06) கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் தொரட்டியாவ மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் மஹவ மற்றும் பிலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 […]

உள்ளூர் செய்திகள்

சர்ச்சைக்குள்ளான 323 கொள்கலன்களை பற்றி கதைப்பதற்கு பயமாக இருக்கின்றதென அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு

  • Jun 30, 2025 - 02:55 PM
  • 0 Comments

கேள்விக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், என்னை நீக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் அதை நீதிமன்றத்தில் கொண்டு செல்வேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது அந்த கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை நான் உங்களுக்கு வழங்க முடியும். அது எங்கே போனது, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் விளையாட்டு

பெல்ஜியம் காரோட்ட போட்டியில் அஜித்குமார் அணி முதலிடம்

  • Jun 30, 2025 - 02:25 PM
  • 0 Comments

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி பட வெற்றிக்குப் பிறகு, இன்னும் சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகுவதாகவும் அஜித் கூறியிருந்தார். இந்த நிலையில், பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்து அஜித் குமார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் கொலை விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிங்கள சட்டத்தரணி வேண்டுகோள்

  • Jun 30, 2025 - 02:15 PM
  • 0 Comments

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தனது முறைப்பாடு தற்போது பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிக்குமாறு யாழ். மயிலிட்டி மக்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை

  • Jun 30, 2025 - 02:07 PM
  • 0 Comments

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (29-06) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் மரத்துடன் மோதி பேரூந்து விபத்து 3வர் காயம்

  • Jun 30, 2025 - 12:16 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று கிரான்குளம் சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் வைத்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளநீர் குடித்த 31 வயதுடையவர் கோவிலில் உயிரிழப்பு

  • Jun 30, 2025 - 12:05 PM
  • 0 Comments

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29-06) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த […]

உள்ளூர் செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்கு பௌத்த பீடங்களை நாடவில்லையென நாமல் தெரிவிப்பு

  • Jun 30, 2025 - 11:57 AM
  • 0 Comments

தேசியமக்கள்சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்த பீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தலைமன்னார் கடலில் மீன்பிடித்த 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

  • Jun 30, 2025 - 11:49 AM
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29-06) உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடித்த 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp