விளம்பரம்

வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கான அரியதோர் வாய்ப்பு!

  • Jul 4, 2025 - 11:17 PM
  • 0 Comments

  சந்தைப்படுத்தல் விற்பனை உன்னதத்தில் தேர்ச்சி (MMSE : Mastering Marketing & Sales Excellence) பெறுபேறுகள் மைய ஊக்குவிப்புப் பயிற்சி & ‘கோச்சிங்’ *சான்றிதழுடனான நேரடி புத்தம்புதுப் பொதுப் பயிற்சி தமிழ் மொழியில் வடகிழக்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை – மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.5.00 மணி வரை மட்டக்களப்பு Sun Shine restuarent ல் நடைபெறவுள்ளது. அதேபோன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை  மு.ப.9.00 மணி தொடக்கம்  பி.ப.5.00 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஓ.எல். மாணவன் தனியயொருவனாக வலயக்கல்வி அலுவலகம் முன் போராட்டம்!

  • Jul 4, 2025 - 04:27 PM
  • 0 Comments

வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மதுபான பார்ட்டியில் வர்த்தக நண்பனை போட்டு தள்ளி சக நண்பர்கள்

  • Jul 4, 2025 - 04:12 PM
  • 0 Comments

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள வர்த்தகரின் நண்பனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஏ.ஐ வந்துவிடடது இனி தமிழ் சிங்கள பிரச்சினையில்லை

  • Jul 4, 2025 - 03:55 PM
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், இந்த மென்பொருளை மொரட்டுவை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து உருவாக்க ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இந்த மென்பொருள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாடுகளுக்கு கிடைக்கும். புதிய மென்பொருளானது சிங்கள உள்ளடக்கத்தை கொண்ட குரல் பதிவுகளை […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில்; காணி விடுவிப்பு ஆரம்பமென்கிறார் திலகநாதன் எம்.பி

  • Jul 4, 2025 - 09:57 AM
  • 0 Comments

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான […]

உள்ளூர் செய்திகள்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் உயிரிழப்பு நண்பர்கள் தலைமறைவு

  • Jul 4, 2025 - 09:50 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் […]

உள்ளூர் செய்திகள்

வர்த்தமானி வழக்கில் அமைச்சர் பிமல் ரத்நாயக்காவை சாடி பதிவுட்டுள்ள சுமந்திரன்

  • Jul 4, 2025 - 09:44 AM
  • 0 Comments

அரசாங்கத்தினால் அபகரிக்கப்படவிருந்த நிலங்கள் எமது நடவடிக்கைகளின் விளைவாகவே பாதுகாக்கப்பட்டது என்பதை உறுதிசெய்த அமைச்சருக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவர்களது சூழ்ச்சி வெளிப்பட்டமையினால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோபமடைவது இயல்பான விடயமேயாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் மனித புதைகுழி ஊடாக தமிழர்கள் அனுபவித்த வலி தெரிகின்றதென்கிறார் பிரிட்டனின் எம்.பி

  • Jul 4, 2025 - 09:33 AM
  • 0 Comments

செம்மணியில் ஒரு மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார். செம்மணியில் ஒரு புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது – மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார் ஜூலை 1998 இல் தமிழ் பள்ளி மாணவி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை – ஆளுநர்

  • Jul 3, 2025 - 11:40 AM
  • 0 Comments

தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கனடாவிலிருந்து விடுமுறையில் யாழ் வந்த பெண் விபத்தில் உயிரிழப்பு

  • Jul 3, 2025 - 11:27 AM
  • 0 Comments

கனடாவில் வசித்து வந்த ஒருபெண், விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கனடாவில் வசித்து வந்த 59 வயதுடைய பெண் ஒருவர் ஆவார். இவர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து, கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில், துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியினர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp