உள்ளூர் செய்திகள்

நல்லை ஆதீனத்தை பொறுப்பெடுக்க விரும்பும் இளம் துறவிகள் இல்லை- கலாநிதி ஆறு. திருமுருகன்

  • Jul 8, 2025 - 06:52 AM
  • 0 Comments

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல் வர்ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது 69 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். மிகவும் கவலை தருகின்ற செய்தி. அவரது கதிரை இன்னும் வெற்றிடமாக இருக்கிறது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் செயலாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தெரிவித்தார் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம் […]

உள்ளூர் செய்திகள்

தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச தயாரென்கின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Jul 7, 2025 - 08:57 PM
  • 0 Comments

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொது வேலைத்திட்டமொன்றின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொரோன்னா மருந்து கொள்வனவில் முறைகேடென கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நீதி அழைப்பானை

  • Jul 7, 2025 - 08:28 PM
  • 0 Comments

நீதி மன்றத்தில் முன்னிலையாக அழைப்பு – கொவிட் எதிரெண்ணல் வாக்கஸீன் வாங்கல் விவகாரத்தில் கெஹெலியவுக்கு விசாரணை தரம் குறைந்த கொவிட் மருந்துகளை வாங்கிய விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. கொழும்பு நிலையான முப்படைக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றம், வரும் 11 ஆம் திகதி குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி அழைப்பாணையை பிறப்பித்துள்ளது. இவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை வழங்கும் நடவடிக்கையின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பாக எந்தவிதத் தீர்மானமும் எடுக்கவில்லை- மத்திய வங்கி

  • Jul 7, 2025 - 08:18 PM
  • 0 Comments

சில ஊடகங்களில் மத்திய வங்கி மற்றும் மஹா பண்டாகார இடையே வாகன இறக்குமதி குறித்து எச்சரிக்கை விடுத்ததாக தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மத்திய வங்கியின் ஒரு உயர்நிலை அதிகாரி இதுபற்றி , இரு அமைப்புகளுக்கு இடையில் எந்தவித ஆவண பரிமாற்றமும் அல்லது தொடர்பும் இல்லையென தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகள் தடைபட்டிருந்த தனிப்பயன்பாட்டுக்கான வாகன இறக்குமதி கடந்த பிப்ரவரி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பொழுது இருந்து ஜூன் மாத இறுதி வரை சுமார் 18,000 வாகனங்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிவப்பு லேபிள் கன்டெய்னர் விடுவிப்பு முறைகேடில் முஜிபுர் ரஹ்மான் விசாரணைக்குட்படுத்தப்படுவார்?

  • Jul 7, 2025 - 07:53 PM
  • 0 Comments

குற்ற விசாரணைப் பிரிவால் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை ‘சிவப்பு லேபிள்’ கொண்ட கன்டெய்னர்களை விடுவித்துள்ள முறைகேடு சம்பந்தமான விசாரணைக்காக அழைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கூறியதாவது, சிஐடி அவரது முகவரியை நாடாளுமன்றத்திலிருந்து கேட்டுக் கொண்டது என்றும், அந்த முகவரி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ‘நான் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், கன்டெய்னர் விடுவிப்பு விவகாரத்தில் சிஐடி எனக்குக் கேள்வி கேட்கவேண்டும் என்பதே தெளிவாக தெரிகிறது’ என்று அவர் குறிப்பிட்டார். […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு 700 புதிய வீடுகளை தமிழக முதல்வர் கையளித்துள்ளார்

  • Jul 7, 2025 - 07:26 PM
  • 0 Comments

தொடர்ச்சியாக நடைபெறும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், 5 மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் 38.76 கோடி ரூபா ( இந்திய பெறுமதி) செலவில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலர் ந.முருகானந்தம் பங்கேற்றனர். 2021 ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்றத்தில் நடைமுறையில் உள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இன்று முதல் தினமும் தொடரூந்து சேவை

  • Jul 7, 2025 - 08:15 AM
  • 0 Comments

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி […]

உள்ளூர் செய்திகள்

யாழ். வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கடற்படை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை

  • Jul 7, 2025 - 08:07 AM
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் நேற்று (6-07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லையே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளம் பகுதியான J/435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள்,மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த […]

உள்ளூர் செய்திகள்

இனி அரச மருத்துவமனைகளில் சிறந்த ஆரோக்கியமான உணவு வழங்கப்படும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • Jul 7, 2025 - 07:57 AM
  • 0 Comments

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp