உள்ளூர் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பால் 3 இலட்சம் பேர் வேலையிழக்கும் நிலையேற்பட்டுள்ளது

  • Jul 11, 2025 - 07:00 AM
  • 0 Comments

அமெரிக்கா, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 30 வீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கையின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய ஆடை ஏற்றுமதித் துறையை ஆழமாகக் குலைக்கக்கூடியது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தத் துறையில் சுமார் 300,000 பேர் நேரடியாக வேலை செய்து வருகின்றனர். மேலும், தனியார் தையல் தொழிலாளர்கள், சில்லறை தொழிலாளர்கள், மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் இதன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது

  • Jul 11, 2025 - 06:43 AM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட இணையதளங்களின் மூலம் பார்க்கலாம்: 🔗 www.doenets.lk 🔗 www.results.exams.gov.lk மேலும், முடிவுகளைப் பற்றிய வினவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் கீழ்கண்ட ஹாட்லைன் எண்ணுகளை வழங்கியுள்ளது: 📞 1911 📞 011 2 785 922 📞 011 2 786 616 📞 011 2 784 208 […]

உள்ளூர் செய்திகள்

இந்தியாவுடனா செய்து கொண்ட மருந்துப்பொருள் ஒப்பந்ததால் இலங்கைக்கு பாதிப்பு – புபுது ஜயகொட

  • Jul 11, 2025 - 06:26 AM
  • 0 Comments

அரசாங்கம் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் செயல்முறையை நிராகரித்து, இந்தியாவுடன் செய்துகாண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மருந்துபொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவின் வியாபார நோக்கத்துக்காக எமது பொது சுகாதாரத்தை பழி கொடுக்கும் நடவடிக்கையாகும் என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபது ஜயகொட தெரிவித்தார். முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள […]

உள்ளூர் செய்திகள்

சர்வதேச நீதிப் பொறிமுறையையை கோருவதற்கு எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணையுமாறு அழைப்பு

  • Jul 11, 2025 - 06:14 AM
  • 0 Comments

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் […]

உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பம்

  • Jul 10, 2025 - 07:19 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம நடைபெறுகினறது

  • Jul 10, 2025 - 06:04 PM
  • 0 Comments

யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று வியாழக்கிழமை பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. […]

உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவுடன் தொடரந்து பேசி வரியை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்-வர்த்தக சம்மேளனம்

  • Jul 10, 2025 - 05:46 PM
  • 0 Comments

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த 44% தீர்வை வரியை 30ம% ஆகக் குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வரிக் குறைப்பை மேலும் குறைப்பதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை வர்த்தக சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை வர்த்தக சம்மேளனம், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கான பிராந்திய போட்டியாளர்களின் கட்டணக் கட்டமைப்பை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்த ஒரு […]

உள்ளூர் செய்திகள்

நாட்டில் முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய ஆராய்ச்சி குழு

  • Jul 10, 2025 - 05:32 PM
  • 0 Comments

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு புதிய தற்காலிகக் குழு ஒன்று கடந்த 07 ஆம் திகதி அமைக்கப்பட்டது. தேசிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் தேசியத் தேவைகளின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலய காணியில் தனியார் கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனடி நிறுத்தம்

  • Jul 10, 2025 - 05:23 PM
  • 0 Comments

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாhரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் தொடர்பு இல்லாத சிலருடைய அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் எதிர்வரும் 21 ம் திகதி ஆரம்பம்

  • Jul 10, 2025 - 05:09 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp