உள்ளூர் செய்திகள்

தேசிய பாதுகாப்பு பாதிப்பை பலப்படுத்துவது எவ்வாறென அரசாங்கத்துக்கு வகுப்பெடுக்க வேண்டுமென்கிறார் சரத் வீரசேகர

  • Jul 7, 2025 - 07:49 AM
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (6-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக […]

உள்ளூர் செய்திகள்

அரசாங்கமும் எதிர்கட்சியும் கொள்கலன்கள் விடயத்தில் இணைந்து செயற்படுகின்றது- புபுது ஜயகொட

  • Jul 7, 2025 - 07:40 AM
  • 0 Comments

சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும் நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் நேற்று (6-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சுங்கத்தில் இருந்து பரிசோதனை இல்லாமல் கடந்த ஜனவரி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா வடக்கில் தமிழ் எல்லைக்கிராமங்களை சிங்கள மயமாக்கும் அரச இயந்திரம்

  • Jul 6, 2025 - 03:02 PM
  • 0 Comments

வவுனியா வடக்கின் தமிழர்களின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான திரிவைச்சகுளம் மற்றும் அதற்கு கீழான 600ஏக்கருக்கும் மேலான வயல்காணிகள் சிங்கள மக்களினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எந்த ஒருவகையான காணி ஆவணங்களும் இல்லாமல் குறித்த காணிகள் எல்லையோர சிங்கள மக்களினால் சத்தமில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த ஆக்கிரமிப்பு மிக வேகமாக வெடிவைத்தகல்லு சந்தி வரை நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. மேற்படி ஆக்கிரமிப்பு பகுதியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சன்சுதன் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது

  • Jul 6, 2025 - 02:53 PM
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (04-07) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

  • Jul 6, 2025 - 12:47 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்தவகையில், இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர். குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஆடாத அரச சேவையினை உருவாக்க வேண்டுமென்கிறார் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர்

  • Jul 6, 2025 - 12:33 PM
  • 0 Comments

அண்மைய நாட்களாக நாட்டில் ஊழல், மோசடி ஊறிப்போயுள்ளது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மாத்திரம் ஊழலை நிறுத்த முடியாது. முதலில் மனப்பான்மை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.தமக்கு உரிமை இல்லாத ஒன்றை வழங்கும் போது அதனை நிராகரிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும். அரச அதிகாரிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் கூறும் தவறான தீர்மானங்களை நிறைவேற்றாத அரச சேவை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற […]

உள்ளூர் செய்திகள்

நிதியின்மையால் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பாதிப்பென்கிறார் முன்னாள் எம்.பி. சுமந்திரன்

  • Jul 6, 2025 - 12:06 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை நாடாகத் திகழ்வதாகவும், எனவே அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரின்போது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய […]

உள்ளூர் செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் வலிக்கு நீதி வழங்க வேண்டுமென்கிறார் நீதியமைச்சர்

  • Jul 6, 2025 - 11:45 AM
  • 0 Comments

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் துன்பத்துக்கு முகங்கொடுத்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும், அவர்களுக்குரிய நீதியை வழங்குவதும், அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதும் இன்றியமையாததாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது. அதன் நீட்சியாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இரண்டாவது தேசிய மாநாடு கடந்த ஜுன் மாதம் 25 – […]

உள்ளூர் செய்திகள்

புதிய அரசியலமைப்பை இயற்றும் இயலுமை அநுர அரசுக்கு இல்லையென ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு

  • Jul 6, 2025 - 11:29 AM
  • 0 Comments

வடக்குஇகிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல சட்டமூலங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். இந்த சட்டமூலங்களை கூட இயற்றிக் கொள்ள முடியாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்க போகிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் இயலுமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது என்று முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சர்வதேச கண்காணிப்பிற்கு நிதி அவசியம் ஆனால் ஐ.நா நிதி வழங்கும் நிலையில்லையென்கிறார் சட்டத்தரணி அம்பிகா

  • Jul 6, 2025 - 11:08 AM
  • 0 Comments

மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கவேண்டும் எனக் கோருகையில், அக்கோரிக்கையை முன்வைப்பவர்கள் எத்தகைய கண்காணிப்பைக் கோருகிறோம் என்பது தொடர்பில் தெளிவாக இருக்கவேண்டும். ஏனெனில் தடயவியல் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் பங்கேற்புக்கு அவசியமான நிதியை ஏற்கனவே நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் ஐ.நா.சபை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேச கண்காணிப்பைக் கோருகையில், அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp