இந்தியா

நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Jul 5, 2025 - 11:54 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது […]

செய்திகள் விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வி!

  • Jul 5, 2025 - 11:48 PM
  • 0 Comments

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக Parvez Hossain Emon 67 ஓட்டங்களையும், Towhid Hridoy 51 ஓட்டங்களையும் Tanzim Hasan Sakib ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து […]

உள்ளூர்

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வில்லை!

  • Jul 5, 2025 - 11:45 PM
  • 0 Comments

நமது நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன. இந்த வரிகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து முடிவெடுப்பவர்களுடன் ஏனைய நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடி தமக்கு சாதகமான முறைகளில் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றனர். ஆனால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்பானவர்கள், தொழில்துறை துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், இத்தகைய இணக்கப்பாடுகளை இதுவரையில் எட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இது குறித்து ஐக்கிய […]

விளம்பரம்

வீட்டில் இருந்தபடியே இலங்கையிலுள்ள நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு!

  • Jul 5, 2025 - 10:57 PM
  • 0 Comments

நீங்கள் கிடைத்த வாழ்க்கையை வாழ விரும்பும் நபரா? அல்லது நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க எண்ணும் நபரா? வீட்டில் இருந்தபடியே இலங்கையிலுள்ள நிறுவனமொன்றில் வேலை செய்து மேலதிக வருமானம் ஈட்டக்கூடிய இலவச வாய்ப்பு சிறந்த அனுபவத்துடன் சரியான வழிகாட்டலை வழங்கிட நாம் தயார்! {{CODE 1}} உங்கள் முயற்சி + எங்கள் பயிற்சி = உங்கள் கனவு இணைந்து கொள்வது முற்றிலும் இலவசம் ☺இணைந்து கொள்வதற்கு எந்த கட்டணமும் இல்லை.(முதலீடு இல்லை.) மறைமுகமான கட்டணங்கள் எதுவும் இல்லை […]

இந்தியா உள்ளூர் சினிமா முக்கிய செய்திகள்

இலங்கையரும் பாலிவுட் நடிகையுமான ஜாக்லின் பெர்னாண்டசின் 200 கோடி மோசடி வழக்கு திடீர் திருப்பம்

  • Jul 5, 2025 - 07:43 AM
  • 0 Comments

பாலிவுட் நடிகையும் இலங்கைப் பிறப்பான ஜாக்லின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது 200 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கை மையமாகக் கொண்டது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சுகேஷ் சந்திரசேகர் என்கிற மோசடிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஜாக்லின் விலை உயர்ந்த பரிசுகள் பெற்றதாக கூறப்பட்டு, அவரும் இதில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜாக்லின், ‘நான் எந்தவொரு மோசடிக்கும் காரணம் அல்ல் சுகேஷ் எனை ஏமாற்றியுள்ளார்’ என்று கூறி, தன்னை […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பொருளாதாரத்தில்; அபாயங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது

  • Jul 5, 2025 - 07:18 AM
  • 0 Comments

சர்வதேச நாணயத் திணைக்களமான ஐ.எம்.எப்., இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னேற்றங்கள் இருந்தாலும், எதிர்பாராத பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. ஐ.எம்.எப்பின் 48 மாத நிதி உதவித் திட்டத்தின் கீழ், இலங்கை 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த நிதி தொகை 1.74 பில்லியன் டொலர்களாகும். இந்த உதவி 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க, கடனை கட்டுப்படுத்த, நாணய கையிருப்புகளை […]

உலகம் செய்திகள் வினோத உலகம்

ஜட்டிக்குள் பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற நம்மவர் தாய்லாந்தில் கைது

  • Jul 5, 2025 - 07:03 AM
  • 0 Comments

தாய்லாந்து வனவிலங்கு செயல்பாட்டுக் குழுவின் அதிகாரிகள், வனவிலங்கு கடத்தலுக்கு முயற்சித்த இலங்கை நபரொருவரை, பாங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது உள் உடையில் மூன்று பாம்புகள் மறைக்கப்பட்டிருந்தன. தாய்லாந்து தேசிய பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவரவியல் பாதுகாப்புத் துறையின் வனவிலங்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள இயக்குநர் பொன்லாவீ புசாக்கியாட் இந்த தகவலை, கடந்த 3ஆம் தேதி துறைசார் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த இலங்கை நபர் ‘ஷெஹான்’ என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எல்.டி.டி க்கு எதிராக வழக்குத் தொடர முடியாதுள்ளதென அருண் சித்தார்த் கவலை

  • Jul 5, 2025 - 06:49 AM
  • 0 Comments

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (04-07) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக, 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, […]

உள்ளூர் செய்திகள்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து – சாவகச்சேரி பிரதேச உப நகரபிதா

  • Jul 5, 2025 - 06:35 AM
  • 0 Comments

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி – சித்துப்பாத்தியில் தோண்ட.. தோண்ட..சிறுவர்களின் எழும்புக்கூடுகளும் உடமைகளும் வருகின்றது

  • Jul 5, 2025 - 06:26 AM
  • 0 Comments

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று (4-07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் (4-07) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp