உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

புரட்சிகர மக்கள் சக்தியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி..!

இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் புரட்சிகர மக்கள் சக்தி சார்பாக எமது புரட்சிகர மேதின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

​மேதினம் என்பது வெறும் விடுமுறை நாள் அல்ல; அது எமது உரிமைக்கான போர்க்குரல்.

​தேயிலைச் செடிகளுக்கு இடையே தேய்ந்து போகும் மலையகத் தொழிலாளர்களின் உழைப்பு, இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால், அந்த உழைப்பிற்கு வழங்கப்படுவது வெறும் சொற்பத் தொகையே. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற கௌரவமான ஊதியம் என்பது எமது சலுகையல்ல, அது எமது அடிப்படை உரிமை!

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணை செதுக்கிய மலையக மக்களுக்கு, சொந்தமாக உரித்துடன் கூடிய காணியும், கௌரவமான வீட்டு வசதியும் வழங்கப்பட வேண்டும். ‘லயன்’ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நில உரிமையுடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்ய நாம் போராடுவோம்.

கல்வி, சுகாதாரம் மற்றும் அரச நிர்வாகச் சேவைகளில் மலையக இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எமது அடையாளமும் கலாச்சாரமும் அங்கீகரிக்கப்பட்ட, தலைநிமிர்ந்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எமது இலக்கு.

தோட்டத் துரைகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் அடிபணிந்து போகும் நிலையை முறியடித்து எமது மக்களின் பலம் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தும் காலம் இது. உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரமே ஒரு தேசத்தின் உண்மையான அதிகாரம் என்பதை உரக்கச் சொல்வோம்.

​மலையக மண்ணின் மைந்தர்களே!
நாம் சிதறிக் கிடந்தால் சுரண்டப்படுவோம், ஒன்றுபட்டால் மட்டுமே வெல்ல முடியும். அரசியல் லாபங்களுக்காக எம்மைப் பயன்படுத்தும் சக்திகளைப் புறந்தள்ளி, புரட்சிகர மக்கள் சக்தியுடன் கைகோர்த்து நில்லுங்கள்.

“எம் வியர்வை துளிகள் இந்த மண்ணை வளப்படுத்தியது போதும்…
இனி எமது போராட்டங்கள் எமது உரிமைகளை கைப்பற்றட்டும்!”

​உழைக்கும் மக்களின் ஒற்றுமை ஓங்கட்டும்!
மலையக மக்களின் உரிமைப் போர் வெல்லட்டும்!

​புரட்சிகர மக்கள் சக்தி
மே 01, 2026

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp