sritharan hospital visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்….!

  • Jun 4, 2026 - 02:36 PM
  • 0 Comments

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட வைத்தியசாலையின் வெளி வளாகப் பிரதேசங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சங்கானை பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பாக தன்னாலான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என […]

morning accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று காலை ஏற்பட்ட விபத்து..!

  • Jun 4, 2026 - 01:17 PM
  • 0 Comments

காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04.06.2026) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்த விலையில் விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதியில் […]

harees political allegation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரசியல் இலாபமீட்டுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடிக்கின்றார்..! சட்டத்தரணி நிதான்சன்

  • Jun 4, 2026 - 12:33 PM
  • 0 Comments

தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து அரசியல் இலாபமீட்டுவதற்காக இலைமறை காயாக இருந்து மறைந்து போன ஒரு சில அரசியல் வாதிகள் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக மீண்டும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்துகின்ற வகையில் பல செய்திகளை உண்மைக்கு புறம்பாக அரசியல் இலாபமீட்டும் நோக்கத்தில் கூறி வருகின்றார்கள்.குறித்த விடயத்தை கூற வேண்டுமாயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவராகவும் இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் […]

dayalini dileepan case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தயாளினி திலீபன் வழக்கில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!

  • Jun 4, 2026 - 12:28 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவுரையாளரின் வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெளிவாகுவதுடன், விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 16 […]

media literacy workshop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை..!

  • Jun 4, 2026 - 11:53 AM
  • 0 Comments

சுகாதாரம் மற்றம் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (04.06.2026) காலை 8.30 மணி முதல் தரமான ஊடக அறிவு தொடர்பாக ஊடக பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுவருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் […]

nagarkovil kush seizure | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு..!

  • Jun 4, 2026 - 10:41 AM
  • 0 Comments

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் நேற்று பிற்பகல்(03.06.2026) மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு பிரதேச காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நாகர்கோவில் கிழக்கு பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் […]

sl weather today 24 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய நாளின் வானிலை..!

  • Jun 4, 2026 - 10:37 AM
  • 0 Comments

04.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை […]

kamalanathan retirement honor | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு..!

  • Jun 4, 2026 - 10:33 AM
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (03.06.2026) காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது. பாடசாலை பதில் அதிபர் கலாநிதி கதிரேசபிள்ளை விருத்தாசலம் தலைமையிலும், பகுதித் தலைவர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பற்றிய கருத்துரைகளும், வாழ்த்துக் கவிகளும் […]

no polythene at temples | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆன்மீகத் தலங்களில் அன்னதானங்களை பொலித்தீ்ன் பைகளில் வழங்காதீர்கள்..!

  • May 29, 2026 - 02:11 PM
  • 0 Comments

மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் ஆன்மீகத் தலங்களில் அன்னதானங்களை பொலித்தீ்ன் பைகளில் வழங்காதீர்கள் என மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். பூநகரி கறுக்காய்தீவுப் பகுதி கோவில் ஒன்றில் அன்னதானத்தில் ஈடுபட்ட ஆலய நிர்வாகத்தினருடனும்- மக்களுடனும் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; கோவில்களிலும், தேவாலயங்களிலும் நிகழ்த்தப்படும் விசேட திருவிழா நிகழ்வுகளில் அன்னதானங்களை வழங்கும்போது அதனை எடுத்துச் செல்வதற்காக அதிக சூட்டோடு பொலுத்தீன் […]

release occupied lands | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காலத்தை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள்..!

  • May 29, 2026 - 02:03 PM
  • 0 Comments

மயிலிட்டியில் சிறிதரன் எம்பி கோரிக்கை காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார் மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு கோரி நடைபெற்ற கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊