டெங்குநோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வும் தொடர் செயற்பாடுகளும் அவசியம்..!
ஆ.ஜென்சன் றொனால்ட். MSc. மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர். டெங்கு நோய் இன்று இலங்கையில் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இது தாக்கக்கூடியது. சிலருக்கு சாதாரண காய்ச்சலாகக் காணப்பட்டாலும், சிலருக்கு உயிருக்கு ஆபத்தான டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) ஏற்படலாம். […]









