illegal shampoo buckets seized in talaimannar | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள் தலைமன்னாரில் சிக்கியது..!

  • Jul 14, 2026 - 11:49 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான ஷெம்பு (Shampoo)பக்கெட்டுகளை தலைமன்னாரில் கடற்படையினர் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்மென்னா கடற்படைக் கப்பல் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி, தலைமன்னார் ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த ஷெம்பு பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சுமார் 5,386 ஷெம்பு பக்கெட்டுகளை கடற்படையினர் கைப்பற்றியதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

life sentence for mannar ice drug offender | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“ஐஸ்” வைத்திருந்தவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை..!

  • Jul 14, 2026 - 11:36 AM
  • 0 Comments

ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று, மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் […]

discussion on skill development daycare opening | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்..!

  • Jul 14, 2026 - 11:22 AM
  • 0 Comments

சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக பராமரிக்கப்படும் திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, மாவட்ட செயலகத்தின் கிளைத் தலைவர்கள் மற்றும் […]

2027 budget proposals under review | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு..!

  • Jul 14, 2026 - 11:05 AM
  • 0 Comments

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு, 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன் மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13.07.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினாலும் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் […]

imf clarifies judges retirement age proposal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு முன்மொழிவு குறித்து ஐ.ம.சக்தியின் வௌிப்படுத்தல்..!

  • Jul 14, 2026 - 10:20 AM
  • 0 Comments

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான முன்மொழிவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படாத பின்னணியில், அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் கடுமையான பிரச்சினை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். டிவி தெரணவில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் […]

national early childhood week begins today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆரம்பப் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வாரம் இன்று முதல் ஆரம்பம்..!

  • Jul 14, 2026 - 10:16 AM
  • 0 Comments

ஆரம்பப் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய தேசிய வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ‘மலரும் சிறுவர் உலகிற்கு – சூரிய கதிராகும் மகிழ்ச்சியான குடும்பம்’ என்ற கருப்பொருளின் கீழ் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த தேசிய வாரம் நடத்தப்படவுள்ளது. உடல், உள-சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி கொண்ட இலங்கை ஆரம்பப் பிள்ளைப்பருவ சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. […]

14 year old boy missing after drowning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்..!

  • Jul 14, 2026 - 10:12 AM
  • 0 Comments

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் கடற்படை […]

crude oil prices rise again | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மறுபடியும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை..!

  • Jul 14, 2026 - 09:43 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% இற்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.29 டொலர்கள் அல்லது 9.59% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 83.30 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 6.73 டொலர்கள் அல்லது 9.42% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 78.14 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. […]

foreign woman arrested with 6kg kush drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வௌிநாட்டு பெண் 6 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது..!

  • Jul 14, 2026 - 09:39 AM
  • 0 Comments

6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் […]

iran attacks oil tankers | Pathivu News உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்..!

  • Jul 14, 2026 - 09:35 AM
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன் பிரஜைகள் எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குறிப்பிட்டுள்ளது. ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahia) ஆகிய இரு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊