gunfire reported in devundara gandara | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு..!

  • Jul 22, 2026 - 09:57 AM
  • 0 Comments

தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (22.07.2026) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

no change in central bank policy rates | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமில்லை..!

  • Jul 22, 2026 - 09:54 AM
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75% என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலைமை உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை […]

eu delegation meets tamil parties in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு..!

  • Jul 22, 2026 - 09:49 AM
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர். […]

sri lanka weather today 15 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jul 22, 2026 - 09:45 AM
  • 0 Comments

22.07.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 […]

kattuvan fire tragedy 5 killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுவான தீ விபத்து 5பேரின் உயிரைப் பறித்த முழுமையான விபரம்..!

  • Jul 22, 2026 - 09:42 AM
  • 0 Comments

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித […]

world banks new dairy farmers scheme | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்..!

  • Jul 22, 2026 - 09:30 AM
  • 0 Comments

‘டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் […]

tn fishermen destroy fishing nets | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்..!

  • Jul 21, 2026 - 04:57 PM
  • 0 Comments

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு, […]

mullaitivu whitefly control coconut seedlings | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்..!

  • Jul 21, 2026 - 03:21 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து தெளிக்கும் நடவடிக்கை இன்று(21.07.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் […]

katuwana factory fire five killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுவான தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் பலி..!

  • Jul 21, 2026 - 03:15 PM
  • 0 Comments

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே […]

navy seizes multi million heroin | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி பெறுமதியான ஹெரோயின்..!

  • Jul 21, 2026 - 03:09 PM
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின், 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊