செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா..!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம்(29.04.2026) யாழ் வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பல்துறை சார்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இவ் நிகழ்வானது வடமராட்சி கிழக்குபிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபாங்கன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது
பின்னர் மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தைத் தொடர்ந்து, பாரம்பரிய வரவேற்பு நடனம் விருந்தினர்களை வரவேற்றது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களின் உரைகளை நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட உதவி மாவட்டச் செயலாளர் (யாழ் மாவட்ட செயலகம்) செல்வி உ. முத்திரகணேஸ்வரன் தர்சினி அவர்கள் உரையாற்றுகையில், சமூக மாற்றத்தில் பெண்களின் வகிபாகம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக:
திருமதி நிருபா நரேந்திரன் (சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி)
திருமதி நிரோமிலா லக்ஷன் (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)
ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்து விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.
கலை நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு
நிகழ்வின் சிறப்பம்சமாக மகளிர் தினச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டன
பின்னர் கலை நிகழ்வுகளாக குழு நடனங்கள் மற்றும் கவிதை வாசிப்புகள்.
பெண்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் விழிப்புணர்வு நாடகம்.
சிலம்பாட்ட ஆற்றுகை போன்ற வீரக் கலைகளும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விதைப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன
மேலும், சமூகத்தில் சாதனை படைத்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மகளிர் வாழ்வாதாரச் சங்கங்களின் பிரதிநிதிகள், FAIRMED நிறுவனம் மற்றும் FRIENDS நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இறுதியாக பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த விழா, நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. “பெண்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதைத்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிருபர்
பூ.லின்ரன்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp