உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்..!

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார்.
கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு படுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர்
எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் எமது வர்த்த சங்க காரியாலத் தில் நடைபெற்றது இக்கலந்துரையாடலில் எதிர் வருகின்ற மே தின ஓய்வு சம்பந்தமாக தொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க்கப்பட்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளரின் உத்தரவிற்கு அமைவாக எதிர்வரும் மே 1ம் திகதி ( வெள்ளிக்கிழமை) எமது பொதுச்சந்தையை முற்று முழுதாக மூடி அத்தினத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதாக தீர்மானம் எட்டப்பட்டது. இத் தீர்மானத்திற்கு அமைவாக அத்தினத்தில் எமது பொதுச் சந்தையின் வளர்ச்சிக்கும் அன்றாட இயங்குதலுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அன்றைய தினம் தொழிலாளர்களின் ஓய்வினை உறுதிப்படுத்தும் பொருட்டு, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் முழுமையாக இடைநிறுத்தப்படும்.
ஆகவே அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களது தொழிலாளர்களுக்கு இந்த விடுமுறையினை வழங்கி, சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
“உழைப்பால் உயர்வோம், உழைப்பவரை மதிப்போம்.”
ஆகவே தினத்தை சிறப்பிக்கும் முகமாக நாம் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி கடந்த வருடத்தில் சிறப்பித்தது போன்று இதனை சிறப்பிக்க உள்ளோம்.
ஆகவே அத்தினத்தில் எங்களோடு சேர்ந்து சிறப்பிக்க விருப்பமானவர்கள் தயவுசெய்து எமது வர்த்த சங்க காரியாலயத்தில் தங்களுடைய பெயரினையும் தொலைபேசி இலக்குத்தனையும் கொடுத்து வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதில் உறுதிப்படுத்தாத எவரும் தயவு செய்து அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் அந்த அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
நிருபர்
பாறுக் ஷிஹான்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp