vavuniya neariyakulam sarees recovered | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு..!

  • Jun 12, 2026 - 09:23 AM
  • 0 Comments

வவுனியா செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட புடவைகள் விநியோகம் செய்யப்படாமல் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்புட்ட நேரியகுளம் கிராம மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் சிவானந்தராசா உறுப்பினர்களான சங்கரன் சசிகுமார், திவைக்சன், அலைக்ஸ் யூட் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் சென்று பார்வையிட்ட போது ஒரு தொகை புடவைகள் […]

batticaloa dengue inspection | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய டெங்கு பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

  • Jun 11, 2026 - 11:54 AM
  • 0 Comments

சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாடசாலைகள் அரச திணைக்களங்கள் ஆலயங்கள் கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்கள் போன்ற இடங்களில் தேசிய செயல்திட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று(10.06.2026) டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களமும் போலீஸ் திணைக்களத்தின் சுற்றாடல் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் […]

jaffna memorial lecture | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவு பேருரை..!

  • Jun 11, 2026 - 11:46 AM
  • 0 Comments

மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவுப் பேருரை நேற்றைய(10.06.2026) தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி நோய் தணிப்பு பராமரிப்பு சங்க தலைவர் ப்ரீத்தி விஜய குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வட பிராந்தியத்தில் முன்னோடி புற்றுநோய் சிகிச்சை ஆரம்பகால அனுபவங்களும் நீடித்த படிப்பினைகளும் என்ற தொனிப்பொருளில் மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் காலத்தில் சேவையாற்றிய மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர். இலங்கை தேசிய புற்றுநோயியல் நிறுவனம் […]

jaffna unity cup cricket | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் ஒற்றுமை கிண்ணத்திற்கான மாபெரும் துடுப்பாட்ட போட்டி..!

  • Jun 11, 2026 - 11:37 AM
  • 0 Comments

நியூ ஸ்டார் விளையாட்டு கழகமும் அரியாலை மத்திய விளையாட்டு கழகமும் இணைந்து நடத்தும் ஒற்றுமை கிண்ணத்துக்கான மாபெரும் 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர். வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கழக மட்டத்தில் குறித்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் போட்டியைக் காண துடுப்பாட்ட ரசிகர்களை அணி திரண்டு வருமாறும் ஏற்பாட்டாளர்கள் […]

karainagar archaeological survey opposition | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெதர்லாந் நாட்டின் தொல்லியல் ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு காரைநகரில் எதிர்ப்பு..!

  • Jun 11, 2026 - 10:58 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட வேளையில், நேற்றைய தினம் புதன்கிழமை அங்கு கூடிய கிராம மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து, அவர்களை அங்கிருந்த்து வெளியேற்றினர். அதன் போது, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து […]

navithanveli first aid training | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாவிதன் வெளியில் இடம்பெற்ற முதலுதவி பயிற்சிநெறி நிகழ்வு..!

  • Jun 11, 2026 - 10:50 AM
  • 0 Comments

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஆலோசனைக்கமைய அவர்களின் தலைமையில் நேற்று (10-06-2026) பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் முதலுதவி வழங்கும் ஒருநாள் பயிற்சிநெறி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உட்பட உதவி பிரதேச செயலாளர் P.பிரணவரூபன் அவர்களும், SRILANKA UNITES நிறுவனத்தின் முகாமையாளர் S. றுவுதரன் அவர்கள், வளவாளர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை கிளையின் உத்தியோகத்தர் திரு. றொசான் அவர்கள், மொழிபெயர்ப்பாளர்திரு.சுதேஷ் ரெசாந்தன்பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர்கள் கலந்து […]

hajj facilities irregularities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அதிகளவு நிதியை வழங்கியிருந்தும் அரைகுறை ஏற்பாடுகள் ஹாஜிகளுக்கு செய்யப்பட்ட வசதிகளில் பல முறைகேடுகள்; விசாரணை அவசியம்..!

  • Jun 11, 2026 - 10:35 AM
  • 0 Comments

– .ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகள் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக விசாரணை செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா? இதுபற்றி சுயாதீன விசாரணை நடத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் சபையில் ஹிஸ்புல்லா எம்.பி. கேள்விகளை எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று (10.06.2026) நிலையியல் […]

sri lanka weather today 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 11, 2026 - 10:25 AM
  • 0 Comments

11.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை […]

nallur temple kumbabishegam | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கும்பாபிஷேக தினம்..!

  • Jun 11, 2026 - 10:22 AM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான நேற்றைய(10.06.2026) தினம் மாலை ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்த பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார் கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு, காலை ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்களால் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மாலை வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

dutch archaeology team jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு..!

  • Jun 10, 2026 - 12:02 PM
  • 0 Comments

தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்நிலையில் குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தொல்லியல் மற்றும் நிலவியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆய்வுகளின் போது, நிலத்தின் தன்மை, நிலத்தடியில் காணப்படும் தொன்மைச் சுவடுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தொடர்பான தரவுகள் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊