batticaloa education meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!

  • Jun 10, 2026 - 11:39 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித் துறையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (10.06.2026) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய ரீதியில் கல்வித் துறையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டம் பிரதமர் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான […]

meteorology red alert | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை..!

  • Jun 10, 2026 - 11:31 AM
  • 0 Comments

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (10.06.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (11.06.2026) காலை 10.30 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேற்சொன்ன கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடுவதுடன், அக்கடற்பரப்புகள் […]

oluvil harbour criticism | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒலுவில் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை முகாமைத்துவம் செய்யத் தவறியிருக்கிறது..! கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

  • Jun 10, 2026 - 11:19 AM
  • 0 Comments

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளை முன்னாள் அமைச்சர் அஷ்ரப் எந்தவொரு தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையும் மேற்கொள்ளாமல் நிர்மாணித்ததாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றாக பிழையான கூற்றாகும். அது தொடர்பில் நாங்கள் மன வேதனை அடைகிறோம். அதேநேரம் ஒலுவில் துறைமுகம் மணல் அரிப்பால் பாதிக்கப்பட காரணம் துறைமுக அதிகாரசபையின் கவனயீனமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09.06.2026) இடம்பெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையினுடைய முத்திரைத் தீர்வை […]

easter attack investigation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் ; சிறு குழுவின் கூச்சலுக்கு அஞ்சி விசாரணையை கைவிடமாட்டோம்..!

  • Jun 10, 2026 - 11:14 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியல் இலாபங்களுக்காகப் போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் விசாரணைகள் அதன் போக்கில் நேர்மையாக முன்னோக்கி நகரும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனைக் […]

pta repeal promise | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம்..! நீதி அமைச்சர் ஹர்ஷன

  • Jun 10, 2026 - 11:05 AM
  • 0 Comments

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை. விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான் கைது செய்யப்பட்டார். பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை […]

anura congratulates modi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து..!

  • Jun 10, 2026 - 10:58 AM
  • 0 Comments

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10.06.2026) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இவ்வாறு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த மைல்கல் மோடியின் நீண்டகால சேவையை மாத்திரமன்றி, உலகின் […]

provincial election update | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் இல்லை..!

  • Jun 10, 2026 - 10:27 AM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10.06.2026) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும். தற்போதுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் […]

jaffna heritage at risk | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அழியும் அபாயத்தில் யாழின் முக்கிய வரலாற்று பொக்கிஷம்..! பொது மக்களுக்கு முக்கிய தகவல்

  • Jun 10, 2026 - 10:16 AM
  • 0 Comments

யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயத்தில் இருந்த நிலையில் அதனை புனரமைப்பு செய்வது தொடர்பாக தற்போது நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் […]

support persons with disabilities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் முயற்சியிலும் வளர்ச்சியிலும் துணை நிற்போம்..! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

  • Jun 10, 2026 - 10:10 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்றைய தினம்(09.06.2026) யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் இருக்கின்ற 500 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமாகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய […]

bharathiraja death | Pathivu News உள்ளூர் இந்தியா புதியவை முக்கிய செய்திகள்

‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா சாவடைந்தார்..!

  • Jun 10, 2026 - 10:00 AM
  • 0 Comments

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று சாவடைந்தார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊