canada shooting kills three | Pathivu News உலகம் புதியவை முக்கிய செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

  • Jun 23, 2026 - 10:14 AM
  • 0 Comments

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் அடங்குவர். சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என மாண்ட்ரீல் காவல்துறைத் தலைவர் ஃபாடி டகர் தெரிவித்தார். கோட்-டெஸ்-நெய்ஜஸில் பகுதியில் நண்பகல் இந்தத் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே துப்பாக்கி ஒன்று நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த சாட்சி ஒருவர், துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். […]

responsible use of loudspeakers at worship places | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வழிபாட்டு தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும்..!

  • Jun 23, 2026 - 10:02 AM
  • 0 Comments

மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் , யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களின் ஊடான அதீத ஒலி எழுப்பல் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்வோர் கற்றல் செயற்பாடுகளில் பாரிய இடர்பாடுகளை […]

north sports infrastructure development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு விளையாட்டுத்துறையை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை..!

  • Jun 23, 2026 - 09:46 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கல்வியால் மாத்திரம் ஒரு மாணவன் முழுமையடைந்து விட முடியாது என்பதை நான் பல இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி […]

ice drug suspect weapons | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐஸ் போதை சந்தேகநபரின் பின்னணியில் இருந்த ஆயுதங்கள்..!

  • Jun 23, 2026 - 09:41 AM
  • 0 Comments

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, கைத்துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் மத்திய குற்றவியல் பணியகத்தினர் மீட்டுள்ளனர். நேற்று (22) நண்பகல் வேளையில் மீட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கைத்துப்பாக்கியும் 09 மில்லிமீட்டர் வகையைச் சேர்ந்த 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவர் என்பதுடன், அவரிடம் […]

kilinochchi child dies well fall | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு..!

  • Jun 23, 2026 - 09:38 AM
  • 0 Comments

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. நேற்று (22) மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, இக்குழந்தை பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளது. தாயும் குழந்தையும் அருகிலுள்ள அயலவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது, தனது கணவருக்கு உணவு வழங்குவதற்காகக் குழந்தையை அயலவர் வீட்டிலேயே விட்டுவிட்டுத் தாய் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர், அயலவர் வீட்டில் […]

messi 17th goal record | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலகக் கிண்ணத்தில் 17 ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை..!

  • Jun 23, 2026 - 09:34 AM
  • 0 Comments

உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தனது நான்காவது கோலை அடித்ததன் மூலம், அர்ஜென்டினா அணியின் தலைவர் […]

srilanka today weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 23, 2026 - 09:29 AM
  • 0 Comments

23.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் […]

batticaloa student success | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிச் சாதனை மாணவிகள் பாராட்டிக் கௌரவிப்பு!

  • Jun 22, 2026 - 01:04 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2025 (2026) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கல்லடி உப்போடை பிரதான வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிபர், பிரதி அதிபர், உபஅதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அதிபரால் பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, பிரதான மண்டபத்தில் அதிபர் […]

muslim central college principal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமிக்க கோரிக்கை..!

  • Jun 22, 2026 - 12:01 PM
  • 0 Comments

கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பிரதம மந்திரி திருமதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இவ் ஆலோசனைக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை ” சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை – 1ம் தர அதிபர் வெற்றிடம், பிரதி அதிபர்கள் வெற்றிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் […]

prevent dengue mosquitoes | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

நுளம்புகள் முட்டையிடக்கூடிய இடங்களை அழிப்பதன் மூலமே அதன் குடித்தொகையைக் கட்டுப்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்கலாம்..!

  • Jun 22, 2026 - 11:13 AM
  • 0 Comments

நுளம்புகள் முட்டையிடக்கூடிய இடங்களை அழிப்பதன் மூலமே அதன் குடித்தொகையைக் கட்டுப்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்கலாம் எனப் பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாகதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். பூநகரிப் பிரதேசசெயலகம்,பூநகரிப் பொலிஸ்நிலையம், சுகாதார திணைக்களம் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மேற்கொண்ட டெங்குக் கட்டுப்பாட்டு சிரமதானப் பணியின் இறுதியில் உரையாற்றியபோதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியே காலை, மாலை வேளைகளிலேயே கடிக்கக் கூடியன. […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊