தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, கைத்துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் மத்திய குற்றவியல் பணியகத்தினர் மீட்டுள்ளனர்.
நேற்று (22) நண்பகல் வேளையில் மீட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கைத்துப்பாக்கியும் 09 மில்லிமீட்டர் வகையைச் சேர்ந்த 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவர் என்பதுடன், அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய குற்றவியல் பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?

