commonwealth games begin today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொதுநலவாய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்..!

  • Jul 23, 2026 - 12:07 PM
  • 0 Comments

உலகின் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களுக்கு அடுத்தபடியாக நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு விழாவான 23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இன்று (23.07.2026) ஆரம்பமாகிறது. 23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இன்று முதல் ஒகஸ்ட் 02 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெறவுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர், பொதுநலவாய விளையாட்டு விழாவொன்றை ஸ்கொட்லாந்து நடத்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இம்முறை விளையாட்டு விழாவில் 74 நாடுகள் பங்கேற்கவுள்ளதுடன், சுமார் […]

firearm found house pelawatte | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பெலவத்தை பகுதியில் வீடொன்றில் துப்பாக்கி கண்டுபிடிப்பு..!

  • Jul 23, 2026 - 12:03 PM
  • 0 Comments

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22.07.2026) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் […]

jaffna hindu explore research excel | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் இந்துவில் பரிசோதிப்போம், ஆராய்வோம், சிறந்து விளங்குவோம்..!

  • Jul 23, 2026 - 10:42 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்று வரும் ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் புதன்கிழமை பார்வையிட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது, கல்லூரியின் உயர்தரப் பிரிவு வளாகத்தில் ‘பரிசோதிப்போம், ஆராய்வோம், சிறந்து விளங்குவோம்’ எனும் தொனிப்பொருளில் நாளை வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில், க.பொ.த. சாதாரண தர (தரம் 10 மற்றும் தரம் 11) மாணவர்களின் பாடத்திட்டத்துக்குரிய அனைத்து விஞ்ஞான […]

support northern small medium entrepreneurs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம்..!

  • Jul 23, 2026 - 10:16 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை. அதனை நிறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு […]

blood test overcharge company fined 3 million | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம்; நிறுவனத்திற்கு 3 மில்லியன் அபராதம்..!

  • Jul 23, 2026 - 09:57 AM
  • 0 Comments

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count – FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும். எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட […]

protect northern eastern coastal areas | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கை..!

  • Jul 23, 2026 - 09:54 AM
  • 0 Comments

புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளார். சுற்றாடல் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட […]

special meeting opposition leaders | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டம்..!

  • Jul 23, 2026 - 09:45 AM
  • 0 Comments

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று (23.07.2026) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த விசேட கூட்டமானது இன்று பிற்பகலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஆதரவை பெறுவது மற்றும் தற்போதைய அரசியல் நகர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

hisbullah special visit papua new guinea parliament | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாடாளுமன்றத்திற்கு கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சிறப்பு விஜயம்.!

  • Jul 23, 2026 - 09:41 AM
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பெல்டன் நமஹை (Belden Namah) சந்தித்து கலந்துரையாடல். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனிப்பட்ட விஜயமாக பப்புவா நியூ கினியாவிற்கு சென்றுள்ள நிலையில், நேற்று (22.07.2026) அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது, பப்புவா நியூ கினியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பெல்டன் நமஹை சந்தித்து இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். அமைச்சர் பெல்டன் நமஹ், நாடாளுமன்ற வளாகத்தை […]

9 indian fishermen arrested mannar sea | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

9 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்பரப்பில் கைது..!

  • Jul 23, 2026 - 09:36 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊