உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகரினால் மட்டக்களப்பில் மாயச்சித்திரக் கண்காட்சி திறந்துவைப்பு..!

மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவில் மாபெரும் மாயச்சித்திரக் கண்காட்சி: கனேடிய உயர்ஸ்தானிகர் மார்ட்டின் இசபெல்லா திறந்து வைத்தார்.

​மட்டக்களப்பு, பயனியர் வீதியில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில், கலை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் மாயச்சித்திரக் கண்காட்சி நேற்று (03.05.2026) ஞாயிற்றுக்கிழமை வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பிரதம செயற்பாட்டாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

​இக்கண்காட்சியினை கனேடிய உயர்ஸ்தானிகர் மார்ட்டின் இசபெல்லா (Martin Isabella) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் இலக்கம் 37, பயனியர் வீதி எனும் முகவரியில் அமைந்துள்ள வளாகத்தில் 3 தினங்கள் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

​இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.தனஞ்சயன், சர்வமத ஒன்றியத்தின் முன்னால் தலைவர் வீ.கே.சிவபாலன் குருக்கள் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததுடன், அழகிய கண்கவர் சித்திரங்களையும் பார்வையிட்டதுடன், கலைஞர்களின் ஆக்கபூர்வமான திறமைகளையும் பாராட்டினர்.

​இக்கண்காட்சியானது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவதோடு, கலை மூலமாக சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் வருகை தந்து மாயச்சித்திரக் கலை நுணுக்கங்களை வியப்புடன் கண்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp