mahinda wife shiranthi fcid summons | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்தவின் மனைவி ஷிராந்திக்கு FCID அழைப்பு..!

  • Oct 6, 2026 - 09:43 AM
  • 0 Comments

சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இதற்மைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

sri lanka 75mm rain today afternoon | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகலில் 75 மி.மீ மழைக்கு வாய்ப்பு..!

  • Oct 6, 2026 - 09:38 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் இன்று (6) அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய […]

porattam film wins public support | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மக்களின் பேராதவை வென்ற ‘போராட்டம்’ திரைப்படம் ; ரசிகர்கள் வரவேற்பு..!

  • Oct 5, 2026 - 10:42 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கின்றார். போராட்டம் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ளதுடன் ஈழத்து திரைப்படத்துறைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் குறித்த […]

kopay saravanapavananda vidyalaya walk | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி..!

  • Oct 5, 2026 - 10:41 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(04.10.2026) நடைபவனி இடம்பெற்றது. பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த நடைபவனி கோப்பாய் பகுதி ஊடாக பருத்தித்துறை வீதியை அடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. நடைபவனியில் கலை நிகழ்ச்சிகளுடன், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்களின் இன்னியம் முழங்க, மாறு வேடத்தில் சிறுவர்கள் பங்கேற்றதுடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை நடைபவனியின் போது கோப்பாய் சித்திர வேலாயுதர் கோவிலில் விசேட வழிபாடுகள் […]

e0aea8e0af86e0ae9fe0af81e0aea8e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d 13 e0ae95e0af87e0aea3e0aebfe0ae95e0aeb3e0af8d e0aea4e0af82 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவில் 13 கேணிகள் தூர்வாரப்படுகிறது..!

  • Oct 5, 2026 - 10:17 AM
  • 0 Comments

வடக்கு மாகாண பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து 5 இலட்ச ரூபாய் நெடுந்தீவு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு, நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் காணப்பட்ட 13 கேணிகள் இயந்திர மற்றும் மனிதவலு மூலம் தூர்வாரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நெழுவினிக் கேணி, ஒற்றைப்பனையடி கேணி, தெற்காட்டு அம்மன் கோயில் கேணி மற்றும் பெருக்கடி கேணி ஆகிய நான்கு கேணிகள் இயந்திர வலுவைப் பயன்படுத்தி தூர்வாரப்பட்டுள்ளன. மேலும், முதலியார்குள கேணி, சாறாப்பிட்டி கேணி, கொறுவாண்டு கேணி, வெண்ணாங்கேணி வடக்கு, வெடிச்சாய் கேணி, கிழக்கு […]

teacher day celebration at idaikurichi school | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா..!

  • Oct 5, 2026 - 10:13 AM
  • 0 Comments

யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா நிகழ்வுகள் 06.10.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் தி. அபராஜிதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக வேர்ல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் சாவகச்சேரி வலய முகாமையாளர் அன்ரன் ரோய் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

velanai central college ground set on fire | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு விசமிகளால் தீ வைப்பு..!

  • Oct 5, 2026 - 10:11 AM
  • 0 Comments

வேலணை மத்திய கல்லூரி மைதானத்தின் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(04.10.2026) விசமிகளால் திட்டமிட்டு தீ மூட்டப்பட்டதில், அப்பகுதியில் காணப்பட்ட நிழல்தரும் மரங்கள், புற்றரைகள் உள்ளிட்ட தாவரங்கள் தீக்கிரையாகியுள்ளன. வேலணைப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வயல்கள், புற்றரைகள், பனங்கூடல்கள் உள்ளிட்ட பல நூறு ஏக்கர் நிலப்பரப்புகள் விசமிகளால் தொடர்ச்சியாக தீ மூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் மூட்டப்பட்ட தீ, காற்றின் காரணமாக வேகமாகப் பரவி, மைதானத்தின் கிழக்குப் பகுதியை […]

staff level agreement with imf | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு..!

  • Oct 5, 2026 - 10:09 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப்பெறும். இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை […]

peradeniya colombo fort express derails | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி தொடருந்து தடம் புரண்டது..!

  • Oct 5, 2026 - 10:07 AM
  • 0 Comments

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து, கங்கொட மற்றும் கடிகமுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று (05.10.2026) அதிகாலை 4.40 மணியளவில் தடம் புரண்டுள்ளது. தொடருந்து பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன், இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து தொடருந்து சேவைகளும் தாமதமடைந்துள்ளன. ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக தொடருந்தே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது. […]

battegama murder accomplice arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பத்தேகம கொலைச் சம்பவம் உடந்தையாக இருந்த ஒருவர் கைது..!

  • Oct 5, 2026 - 09:56 AM
  • 0 Comments

பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (4) அம்பலாங்கொட பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊