fire breaks out at a commercial building in kaduwela | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கடுவலை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்..!

  • Nov 19, 2026 - 10:19 AM
  • 0 Comments

கடுவலை நகரிலுள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (19.11.2026) காலை இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

discussion between the prime minister and the world bank executive director | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமருக்கும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல்..!

  • Nov 19, 2026 - 10:08 AM
  • 0 Comments

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீலகாந்த் மிஸ்ரா அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் உறவை எடுத்துரைத்ததுடன், உலக வங்கி இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவுக்காகத் தமது நன்றியையும் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், எதிர்கொள்ளப்படும் பிரதான சவால்கள் ஆகியன குறித்து இதன்போது விரிவாகக் […]

sri lanka weather forecast for today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

  • Nov 19, 2026 - 10:05 AM
  • 0 Comments

ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் […]

case against namal concludes at colombo fort magistrates court | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நாமல் மீதான வழக்கு நிறைவு..!

  • Nov 18, 2026 - 02:02 PM
  • 0 Comments

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணச்சலவை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்வதாகக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18.11.2026) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குத் தொடர்பான ஆரம்ப அறிக்கையும் சான்று பொருட்களும் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றில் அறிவித்தார். […]

six students hospitalised after wasp attack | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில்..!

  • Nov 18, 2026 - 01:59 PM
  • 0 Comments

நானுஓயா – எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்கள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (18.11.2026) காலை பாடசாலை கட்டடமொன்றின் கூரையிலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அங்கு நின்ற மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும், 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

rajanganaye saddharathana thero arrested just moments ago | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சற்றுமுன்னர் கைதான இராஜாங்கனே சத்தாரதன தேரர்..!

  • Nov 18, 2026 - 01:55 PM
  • 0 Comments

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டார். அதன்படி, விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

defence secretary reviews military activities in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இராணுவச் செயற்பாடுகளை ஆராய்ந்தார் பாதுகாப்புச் செயலர்..!

  • Nov 18, 2026 - 01:11 PM
  • 0 Comments

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா நேற்று (17.11.2026) பலாலியில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு (SFHQ-J) விஜயம் செய்தார். இதன்போது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வடக்கு பிராந்தியத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது, வடக்கு பிராந்தியத்தில் இராணுவத்தின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விரிவாக ஆய்வு செய்ததுடன், மூலோபாயத் தேவைகள், வழங்கல் ஏற்பாடுகள், படையினரின் நலன்புரி […]

protest held at jaffna university in support of islandwide non academic staff strike | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாடளாவிய கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்..!

  • Nov 18, 2026 - 01:10 PM
  • 0 Comments

பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் சம்மேளனம் முன்வைத்துள்ள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, இன்றைய தினம் புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

awareness programme on healthy work environment and psychological wellbeing for district secretariat officers | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் மற்றும் உளவியல் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..!

  • Nov 18, 2026 - 10:52 AM
  • 0 Comments

மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் மற்றும் உளவியல் நலன் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பழைய மாணவரும், அவுஸ்திரேலியாவில் வைத்திய கலாநிதியாகப் பணியாற்றுபவருமான வைத்தியர் அகிலன் சிவஞானம், அலுவலகச் சூழலுக்கும் குடும்பச் சூழலுக்கும் இடையில் ஆரோக்கியமான சமநிலையைப் பேணுவதன் அவசியம் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும், […]

four day business planning training workshop for small scale entrepreneurs begins in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான நான்கு நாள் வியாபாரத் திட்டப் பயிற்சிச் செயலமர்வு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்..!

  • Nov 18, 2026 - 10:48 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார். சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவு, முகாமைத்துவத் திறன் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊