இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கின்றார்.
போராட்டம் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ளதுடன் ஈழத்து திரைப்படத்துறைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் குறித்த சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு வகையான வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
முகப்புத்தகத்தில் வெளியான பதிவொன்றில்,
எங்கள் மண்ணிலிருந்து தொழில்நுட்ப ரீதியிலும் மேம்பட்ட Entertainment படமொன்றை கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கையின் ஊற்று இந்த “போராட்டம்” திரைப்படம்.
முழுக்க முழுக்க எங்கள் ஊர் மொழிநடை, சொற்பாவனைகள், இயல்பான நடிப்புகள், பொருத்தமான இசை, தேவையான தொழில்நுட்பம் என ஒரு திருப்தியான 2 மணித்தியால திரையரங்க அனுபவத்தை கொடுத்தது.
அறிமுக நடிகர் என்பதை தாண்டி இயல்பான நபராகவே திரையில் தெரிந்தார் ரீகன். பாராட்டுகள்.தொடர்ந்தும் படங்கள் நடிக்க வேண்டும்.
திரைப்படத்தில் உண்மையில் 4 அல்லது 5 பேர் ஹீரோக்களாக நடிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள். எங்கள் திரைத்துறை அவர்களுக்கான கதைகளை உருவாக்க வேண்டும். பின்னணி இசையில் மதீசன் தன்னை upgrade செய்துவிட்டார். படத்தோடு எங்களை இசை இணைத்துக்கொள்கிறது.
ஆனால் VFX இல்லாத ரியல் காட்சிகளில் எடுக்கப்படும் திரைப்படத்தில் இந்த காட்சிப்படுத்தல்களே இயல்பானவையாகவும் போதுமானவையாகவும் இருந்தன. அதனால்தான் மைதானத்திலிருந்து போட்டியை பார்க்கும் உணர்வை கொடுத்தது. அந்தகாட்சிகளோடு ஒட்டுமொத்தமாக காட்சிப்பதிவில் AK கமல் திரைப்படத்துக்கு பெரும் பலம்.
தமிழக சினிமாவில் நடுத்தர பட்ஜெட்டில் வரக்கூடிய திரைப்படங்களுக்கு சரிசமமாக போட்டியிடக்கூடியவகையில் எங்களால் திரைப்படங்களை எடுக்க முடியும் என்பதற்கும் + ஜனரஞ்சகமான திரைப்படங்களுக்கும் களம் உள்ளது என்பதையும் போராட்டம் நிரூபித்துள்ளது.
சிவராஜ் குழுவுக்கு பெரிய நன்றி. பெரிய முதலீட்டை செய்யும் தயாரிப்பாளருக்கு நியாயம் செய்யக்கூடிய ஒரு படத்தை எடுத்து இந்த துறையில் புதிய தயாரிப்பாளர்களை வரச்செய்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளனர்.
லாபத்தை எடுத்துக்கொடுத்து திரைத்துறையை வளரச்செய்ய வேண்டிய பொறுப்பு மக்களிடம். நம்பிக்கையோடு செல்லலாம் + குடும்பமாக செல்லலாம், நல்லதொரு ஜனரஞ்சகமான எங்களூர் திரையனுபவத்தை போராட்டம் திரைப்படம் நிச்சயமாக தரும். என வாழ்த்துகளும் திரைப்படத்தின் மீதான நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?

