jaffna progress review meeting women child minister | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் தலைமையில் யாழில் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்..!

  • Jul 1, 2026 - 11:54 AM
  • 0 Comments

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்குபற்றுதல்களுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பெண் […]

jaffna cake making competition | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் நடைபெற்ற பிரமாண்ட கேக் தயாரிப்பு போட்டி..!

  • Jul 1, 2026 - 11:48 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேக் தயாரிப்பு போட்டியில் கண்டியை சேர்ந்த பெரேரா எனும் பெண்மணி முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் , ஒரு இலட்ச ரூபாய் பண பரிசிலையும் பெற்றுக்கொண்டுள்ளார். Jaffna City Hotel இன் ஏற்பாட்டில் “CAKE CROWN COMPETITION 2026” எனும் கேக் தயாரிப்பு போட்டி அண்மையில் Jaffna City Hotel இல் நடைபெற்றது. குறித்த போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று , தமது திறமைகளை வெளிக்காட்டினர். அதில் கண்டியை சேர்ந்த பெண் மணி முதலிடத்தையும் ஒரு இலட்ச […]

remove qr system immediately | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

QR முறையை உடனே நீக்குங்கள்..!

  • Jul 1, 2026 - 11:40 AM
  • 0 Comments

எரிபொருட்கள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறுவதால், கியூஆர் முறையை அரசாங்கம் நீக்க வேண்டும். அதேநேரம் எரிபொருட்களுக்கான விலை குறைப்பு போதுமானதல்ல என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக சந்தையில் தற்போது எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள வீதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் அரசாங்கத்தின் விலை குறைப்பு போதுமானதாக இல்லை. ஏனெனில் உலக சந்தையில் விலை அதிகரிக்கும்போதெல்லாம் […]

penmaiyai nesippom jaffna event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“பெண்மையை நேசிப்போம்” யாழில் இடம்பெற்ற விசேட நிகழ்வு..!

  • Jul 1, 2026 - 10:44 AM
  • 0 Comments

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(30.06.2026) நடைபெற்றது. வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்துகொண்டார். சிறப்பு […]

suresh salle gota ally | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுரேஸ் சலே:கோட்டாவின் அலுக்கோசு..!

  • Jul 1, 2026 - 10:35 AM
  • 0 Comments

ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 6000 நாட்கள கடந்துள்ளது. இதனிடையே அவரது துணைவியார் சந்தியா எக்னெலிகொட” கோட்டாபய ராஜபக்சவின் குற்ற இராச்சியத்தை இயக்கிய முக்கிய இயந்திரமாக சுரேஸ் சலே செயல்பட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். முதலில் பிரகித் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கைத் திசை திருப்ப இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ” தகவல்கள் இல்லை” என்றார்கள். பிறகு, ” தகவல்கள் எரிந்துவிட்டன” என்றார்கள். கடைசியாக, ” தகவல்களை தந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]

jaffna hospital new ct scan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய CT Scan இயந்திரம் வழங்க நடவடிக்கை..!

  • Jul 1, 2026 - 10:31 AM
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக , போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான விசேட குழுவினர் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து , வைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை நேரில் பார்வையிட்டதுடன், பல மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை […]

peliyagoda traffic | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேலியகொட பகுதியில் போக்குவரத்து நெரிசல்..!

  • Jul 1, 2026 - 10:27 AM
  • 0 Comments

பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை வேலை நேரத்தின் போது இந்த லொறி பழுதடைந்ததன் காரணமாக, கொழும்பிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், பழுதடைந்த லொறியை வீதியிலிருந்து அகற்றுவதற்கும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் […]

disability id card notice | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

  • Jul 1, 2026 - 10:23 AM
  • 0 Comments

அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவைகளை வழங்குவதற்காக, சிறப்பு அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில், இடம்பெற்ற நிகழ்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாற்றுத்திறனாளிகளை விளிக்கும்போது, பயன்படுத்தப்பட வேண்டிய சொற்களஞ்சியத்தை உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து வெளியிடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

women targeted for social media income | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சமூகஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவு படுத்துகின்றனர்..!

  • Jul 1, 2026 - 10:19 AM
  • 0 Comments

சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய […]

newlywed man hacked to death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இரவு நேரத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை..!

  • Jul 1, 2026 - 10:08 AM
  • 0 Comments

குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு(30.06.2026) இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊