யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேக் தயாரிப்பு போட்டியில் கண்டியை சேர்ந்த பெரேரா எனும் பெண்மணி முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் , ஒரு இலட்ச ரூபாய் பண பரிசிலையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
Jaffna City Hotel இன் ஏற்பாட்டில் “CAKE CROWN COMPETITION 2026” எனும் கேக் தயாரிப்பு போட்டி அண்மையில் Jaffna City Hotel இல் நடைபெற்றது.
குறித்த போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று , தமது திறமைகளை வெளிக்காட்டினர். அதில் கண்டியை சேர்ந்த பெண் மணி முதலிடத்தையும் ஒரு இலட்ச ரூபாய் பண பரிசினையும் , இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்மணி பெற்றுக்கொண்டதுடன் 50 ஆயிரம் ரூபாய் பண பரிசினையும் பெற்றார், மூன்றாம் இடத்தை பெற்றவர் 25 ஆயிரம் ரூபாய் பண பரிசையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் . அவர்களை ஊக்குவிக்கும் முகமாக 10 ஆயிரம் ரூபாய் பண பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

What’s your Reaction?

