அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை..!
டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் முடிவுக்கு வருகின்றன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அரசாங்க ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட […]









