பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலய கும்பாபிசேக கர்மாரம்பம்..!
சுதானந்த சுவாமி அவர்களது முழுமையான நிதி பங்களிப்பில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்ணித்தலை இராஜ இராஜேஸ்வர சிவன் திருக்கோவில். 02.07.2026
சுதானந்த சுவாமி அவர்களது முழுமையான நிதி பங்களிப்பில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்ணித்தலை இராஜ இராஜேஸ்வர சிவன் திருக்கோவில். 02.07.2026
ஈஸ்டர் சூத்திரதாரியைக் கைது செய்ய அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஆதரவை வழங்கும். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4156753707815548
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபாய் பணம் அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04.07.2026) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் […]
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்று (02.07.2026) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 170 என்ற வெற்றியிலக்கை […]
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் […]
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03.07.2026) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு நேற்று வியாழக்கிழமை 02.07.2026 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் யூ.எவ்.எம்.வாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் அல்ஹாஜ் ஏம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.செய்க் எம்.எம்.ஜவாட், மற்றும் காத்தான்குடி நகரசபை நகரபிதா அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய […]
கதிர்காமம் பாதயாத்திரையில் செல்லும் சுப்பிரமணிக்கு( நாய்) யோகட் கொடுக்க வேண்டாம். அத்துடன் அதனை தூக்கி தடவி அழைய வேண்டாம் என்று வனஜீவராசிகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவிக்கையில்.. இதுவரை சுப்பிரமணிக்கு மூன்று இடங்களில் சோர்ந்து போய் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இறுதியாக விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நேற்றிரவு சென்றடைந்த பொழுது அங்கும் சுப்பிரமணி மிகவும் சோர்வடைய அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . இப்பொழுது உகந்த மலையை நோக்கி இறுதி […]
மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத விவசாய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் உருவாகி உள்ள முறுகல் […]