உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய CT Scan இயந்திரம் வழங்க நடவடிக்கை..!

jaffna hospital new ct scan | Pathivu News
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக , போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான விசேட குழுவினர் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து , வைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை நேரில் பார்வையிட்டதுடன், பல மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை சுகாதார அமைச்சர் வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அதனை தொடர்ந்து வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள், எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு வசதிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்போது, தற்போது சேவையில் உள்ள CT Scan இயந்திரத்தையும் சுகாதார அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வியந்திரம் தொடர்ச்சியாக பெருமளவிலான நோயாளிகளுக்கு சேவை வழங்கி வருவதால், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் அவசியம் என்பதை கதிரியக்க நிபுணர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இதனை கவனத்தில் கொண்ட சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், அடுத்த ஆண்டில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்த புதிய CT Scan இயந்திரம் நிறுவப்படுவதன் மூலம் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதுடன், அவசர மற்றும் விசேட மருத்துவ சேவைகள் மேலும் விரைவாகவும் திறம்படவும் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க சேவைகள் மேலும் வலுப்பெற்று, வடக்கு மாகாண மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும் என வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp