யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறந்த ட்ரோன்;ஒருவர் கைது..!
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் “ட்ரோனை” பறக்க விட்ட இளைஞனை கைது செய்ததுடன் , ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் […]









