நீர்கொழும்பு சிறை மோதல் தீவிரமடைந்தமைக்கான காரணம்..!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் இவ்வளவு தூரம் தீவிரமடைந்ததற்குக் காரணம், கைதிகள் மீது வைக்கப்பட்டிருந்த அதீத நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், ‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டார். “ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழக்கின்றனர். அது அதிகாரிகளுக்குப் பரவியிருக்கவில்லை. மறுநாள் காலையில் எமது அதிகாரிகள் […]









