உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறந்த ட்ரோன்;ஒருவர் கைது..!

drone over jaffna prison one arrested | Pathivu News
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் “ட்ரோனை” பறக்க விட்ட இளைஞனை கைது செய்ததுடன் , ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்வதற்காக , வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் , சிறைச்சாலைக்கு அருகில் வீதியில் அமைக்கப்படும் பாலத்தை காணொளி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் ட்ரோன் ஊடாக எடுத்த காணொளிகளை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp